Trump’s reciprocal tariffs
அமெரிக்காவின் அறிவிப்பு:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதில் வரி உலகளாவிய சந்தைகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. உலகளாவிய பங்குச் சந்தைகள் பெரும் கொந்தளிப்பைக் கண்டுள்ளன. அதே நேரத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் ஈர்த்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினால், தங்க ETF முதலீடு சிறந்த தேர்வாக இருக்கும்.
26% reciprocal import tariff
26% இறக்குமதி வரி:
ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியப் பொருட்களுக்கு 26% இறக்குமதி வரியை டிரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, சந்தைகளில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு தங்கம் அதிக லாபம் ஈட்டும் வாய்ப்பாக உள்ளது.
Gold ETFs
தங்கத்தில் முதலீடு:
தங்க ETFகள் போன்ற தங்கத்துடன் இணைக்கப்பட்ட பிற முதலீடுகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், ஆபரணத் தங்கத்துக்கு மாற்றாக தங்க ETF இல் முதலீடு செய்யலாம். தங்க ETF-களில் முதலீடு செய்வதற்கு முன், கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்று - செலவு விகிதம். அதாவது, நிதி மேலாண்மைக்கான செலவு குறைவாக இருந்தால், முதலீட்டாளர்கள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள். குறைந்த செலவு விகிதத்தைக் கொண்ட, நீண்ட காலத்திற்கு சிறந்த வருமானத்தைத் தரக்கூடிய தங்க ETF-கள் பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.
Top 3 Gold ETFs
டாப் 3 தங்க ETF முதலீடு:
ஜெரோதா தங்க ETF 0.32% செலவு விகிதம் கொண்டது. 26 பிப்ரவரி 2024 இல் வெளியிடப்பட்டது. இது அதிக ரிக்ஸ் கொண்டது. ஆனால், ஒரு வருடத்தில் 30.58% வருமானம் ஈட்ட முடியும்.
மிரே அசெட் தங்க ETF 0.34% செலவு விகிதத்தைக் கொண்டிருக்கிறது. இதன் வெளியீட்டு தேதி 20 பிப்ரவரி 2023 ஆகும். இதுவும் ரிஸ்க் அதிகம் உள்ளது. இதன் மூலம் 30.54% வருடாந்திர வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
எல்ஐசி எம்எஃப் தங்க ஈடிஎஃப் 9 நவம்பர் 2011 இல் வெளியிடப்பட்டது. இதன் செலவு விகிதம் 0.41% ஆகும். ரிஸ்க்மீட்டரில் இதுவும் உயர் நிலையில்தான் இருக்கிறது. ஆனால், ஆண்டுக்கு 29.48% வருமானம் தரக்கூடியது.
Gold ETF Benefits
தங்க ETF நன்மைகள்:
தங்க ETF-களில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. தங்கத்தின் விலை உயர்வால் ஏற்படும் நன்மைகளை இதன் மூலமாகவும் பெறலாம். ஆனால், தங்கத்தின் பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து எந்த கவலையும் தேவையில்லை. குறைந்த செலவில் முதலீடு செய்ய முடியும். பணப்புழக்கம் அதிகமாக உள்ளது முதலீடாகும். இதனால், தேவைப்படும்போது எளிதாக விற்கவும் முடியும்.
Gold ETF - safe and profitable
லாபகரமான முதலீடு:
டிரம்பின் புதிய வரி அறிவிப்புகளுக்கு மத்தியில் ஏராளமான முதலீடுகள் தங்கத்தை நோக்கித் திரும்பியுள்ளன. சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவும் இந்தக் காலகட்டத்தில், தங்க ETF ஒரு பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாக இருக்கும். நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தால், சரியான ETF-ஐத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம். உங்கள் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தி, நல்ல வருமானத்தையும் பெறலாம்.