ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்

Published : Feb 24, 2026, 03:06 PM IST

மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, ஆண்டுக்கு வெறும் ரூ.20 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் வரையிலான விபத்து காப்பீட்டை வழங்குகிறது. 18 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.

PREV
14
ரூ.20 காப்பீடு திட்டம்

பாதுகாப்பான வாழ்க்கைக்கு காப்பீடு மிகவும் அவசியம். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் மத்திய அரசு பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வருடத்திற்கு ரூ.20 மட்டும் கட்டினால் ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு கிடைக்கும் என்பது இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

24
மத்திய அரசு விபத்து காப்பீடு திட்டம்

இந்த திட்டம் 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 18 முதல் 70 வயதுக்குள் உள்ளவர்கள் இதில் சேரலாம். கட்டணம் தானாகவே வங்கி கணக்கில் இருந்து ஆட்டோ-டெபிட் முறையில் கழிக்கப்படும். இதனால் புதுப்பிப்பு சிக்கல் இருக்காது.

34
ரூ.2 லட்சம் வழங்கப்படும்

விபத்தில் உயிரிழந்த நபருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். இரு கைகள், இரு கால்கள் அல்லது இரு கண்கள் முழுமையாக செயலிழந்தாலும் அதே அளவு காப்பீடு கிடைக்கும். பகுதி ஊனமுற்ற நிலை ஏற்பட்டால் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

44
நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு

இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் மே 31 வரை. அருகிலுள்ள வங்கி கிளையில் விண்ணப்பம் அளித்து சேரலாம். மிக குறைந்த கட்டணத்தில் பெரிய பாதுகாப்பு வழங்கும் இந்த திட்டம், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நிதி பாதுகாப்பு தரும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories