ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!

Published : Feb 24, 2026, 02:49 PM IST

Train Ticket 1% Cashback Deal: இந்த 1% கேஷ்பேக் சலுகை மே 31ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு இந்த கேஷ்பேக் சலுகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

PREV
14
ஏழைகளின் தங்க ரதம் ரயில்

இந்தியாவில் ரயில் பயணத்தை விரும்பாதவர்கள், ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறைந்த கட்டணத்தில் தொலைதூர இடங்களுக்கும் அசதியின்றி நிறைவான பயணம் மேற்கொள்ள முடியும் என்பதால் பலரும் ரயிலை நாடி வருகின்றனர். இதனால் முக்கிய ரயில்களுக்கு டிமாண்ட் அதிகரித்து டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. குடும்பத்துடன் பயணம் மேற்கொள்பவர்கள் 1 மாதத்துக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

24
கன்பார்ம் டிக்கெட் வழங்கும் 1% கேஷ்பேக்

இந்த நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவில் முன்னோடியாக இருக்கும் கன்பார்ம் டிக்கெட் (ConfirmTkt) நிறுவனம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 1% கேஷ்பேக் (cashback) வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. அதாவது ConfirmTkt செயலி வாயிலாக நீங்கள் புக் செய்யும் ஒவ்வொரு ரயில் டிக்கெட்டுக்கும் 1% கேஷ்பேக் உங்களுக்கு கிடைக்கும். உதாரணத்துக்கு சென்னை டூ திருநெல்வேலிக்கு ரயிலில் ஸ்லீப்பர் டிக்கெட் ரூ.400 வருகிறது. கன்பார்ம் டிக்கெட் செயலி மூலம் நீங்கள் புக் செய்யும்போது உங்களுக்கு 4 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும்.

34
1% கேஷ்பேக் எப்படி கிடைக்கும்?

இந்த கேஷ்பேஷ் சலுகைக்கு எந்தவித அதிகப்பட்ச வரம்பும் கிடையாது. நீங்கள் எவ்வளவு ரூபாய்க்கு டிக்கெட் புக் செய்தாலும் 1% கேஷ்பேக் உங்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த கேஷ்பேக் பெறுவதற்கு எந்தவித Promo Code-ம் தேவையில்லை. நீங்கள் வழக்கம்போல் டிக்கெட் புக் செய்தால் ஆட்டோமேட்டிக்காக 1% கேஷ்பேக் கன்பார்ம் டிக்கெட் செயலியின் வாலட்டில் (wallet) வந்துவிடும். 

நீங்கள் அடுத்த முறை டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இந்த கேஷ்பேக் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை ரயிலின் சிட்டிங், ஸ்லீப்பர் மற்றும் ஏசி கோச் என அனைத்து முன்பதிவுகளுக்கும் பொருந்தும்.

44
கேஷ்பேக் தொகை வங்கி கணக்கில் கிரெடிட் ஆகுமா?

கன்பார்ம் டிக்கெட் வழங்கும் இந்த சலுகை மே 31ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கேஷ்பேக் கிடைக்கும். நீங்கள் பெறும் கேஷ்பேக் தொகையை 90 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். இல்லாவிடில் அது காலாவாதியாகி விடும். 

மேலும் கேஷ்பேக் தொகையை உங்கள் வங்கி கணக்குக்கு மாற்றிக் கொள்ள முடியாது. அது கன்பார்ம் டிக்கெட் வாலட்டில் (ConfirmTkt Wallet) மட்டுமே இருக்கும். அடுத்த முறை நீங்கள் டிக்கெட் புக் செய்யும்போது இதை கிளிக் செய்து அதில் இருக்கும் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கேஷ்பேக் சலுகையை எப்படி பெறுவது?

அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு இந்த கேஷ்பேக் சலுகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மொபைபில் பிளே ஸ்டோர் (Play Store) சென்று ConfirmTkt செயலியை இன்ஸ்டால் செய்து, உங்கள் பெயர், மொபைல் எண், முகவரி உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து டிக்கெட் புக் செய்து இந்த சலுகையை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories