கிழிந்த, சேதமான நோட்டு இருக்கா? வங்கியில் இலவசமாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?

Published : Feb 23, 2026, 03:50 PM IST

கிழிந்த, பழுதடைந்த அல்லது சேதமான பண நோட்டுகளை வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி (RBI) பிராந்திய அலுவலகங்களில் இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். அது எப்படி என்பதை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

PREV
14
கிழிந்த நோட்டு மாற்றம்

உங்களிடம் கிழிந்த அல்லது பழுதடைந்த நோட்டுகள் உள்ளனவா? அவற்றை மாற்றுவது எப்படி என்று குழப்பமா? அப்படியானால் இந்த தகவல் உங்களுக்காக. கிழிந்த, பழைய அல்லது சேதமான நோட்டுகளை வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி (RBI) பிராந்திய அலுவலகங்களில் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதற்காக எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.

24
பழுதடைந்த நோட்டு மாற்ற விதிமுறை

ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.5,000 மதிப்பிலான நோட்டுகள் அல்லது 20 நோட்டுகள் வரை நேரடியாக மாற்றிக் கொள்ளலாம். இதை மீறினால் வங்கியில் தனிப்பட்ட விண்ணப்பம் அளிக்க வேண்டும். சில சமயங்களில் சேவை கட்டணம் விதிக்கப்படலாம். எந்த ஆவணங்களும் தேவையில்லை என்பது பொதுமக்களுக்கு பெரிய சலுகையாகும்.

34
வங்கியில் நோட்டு மாற்றம்

ரூ.1 முதல் ரூ.20 வரையிலான நோட்டுகள் இரண்டு துண்டுகளுக்கு மேல் கிழிந்திருக்கக்கூடாது. நோட்டின் எண் தெளிவாக இருக்க வேண்டும். ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.2000 போன்ற உயர் மதிப்புள்ள நோட்டுகளில் 40%–80% அளவுக்கான விதிமுறைகள் உள்ளன. 80%க்கும் மேல் இருந்தால் முழு மதிப்பு வழங்கப்படும்.

44
சேதமான நோட்டு மாற்றம்

முற்றிலும் சேதமடைந்த, எண் தெரியாத அல்லது திருத்தப்பட்ட நோட்டுகள் ஏற்கப்படமாட்டாது. அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவு செய்வார்கள். எனவே கிழிந்த நோட்டுகளை வீணாக்காமல், வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories