ரயில் டிக்கெட் புக்கிங்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றம்.. ரயில் பயணிகள் உஷார்!

Published : Feb 23, 2026, 02:05 PM IST

இந்திய ரயில்வே பயணிகளுக்கு முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளது.

PREV
14
மார்ச் 1 முதல் மாற்றங்கள்

இந்திய ரயில்வே பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மார்ச் 1, 2026 முதல் யுடிஎஸ் மொபைல் செயலி மூலம் பொது மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் பதிவு செய்ய முடியாது. அதற்கு பதிலாக புதிய ‘RailOne’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

24
யுடிஎஸ் செயலி

யுடிஎஸ் செயலியை திறக்கும் போது, ​​RailOne செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவிக்கும் பாப்-அப் தகவல் தோன்றும். இதன் மூலம் பயணிகள் புதிய செயலிக்கு மாற்றப்படுவார்கள். பழைய யுடிஎஸ் செயலியில் செய்யப்பட்ட முன்பதிவுகள் RailOne-க்கு மாற்றப்படும்.

34
ரயில்வே சூப்பர் ஆப்

RailOne "ரயில்வே சூப்பர் ஆப்" என விளம்பரப்படுத்தப்படுகிறது. அனைத்து டிக்கெட் சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும். இது டிக்கெட் பதிவு செயல்முறையை எளிதாக்கும்.

44
இந்தியன் ரயில்வே

பயணிகள் இனி General மற்றும் Platform டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற RailOne செயலியை பயன்படுத்த வேண்டும். டிஜிட்டல் இந்தியா முயற்சியின் ஒரு பகுதியாக, ரயில்வே துறை பயண அனுபவத்தை மேலும் நவீனப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories