பெட்ரோல் பங்க்குகளில் மட்டும் சோதனை செய்யாமல், எரிபொருள் சப்ளை செய்யப்படும் அனைத்து இடங்களிலும், அதாவது சப்ளை செயின் முழுவதிலும், கலப்படத்தை முன்கூட்டியே கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு (OMCs) அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், விநியோக நெட்வொர்க்கின் வெவ்வேறு கட்டங்களில் தரப் பிரச்சினைகளைக் கண்டறிய முடியும்.
எண்ணெய் நிறுவனங்களிடம் ஏற்கனவே நவீனமான மற்றும் விரிவான சோதனை முறைகள் உள்ளன. இப்போது கொண்டு வந்துள்ள கூடுதல் சோதனைகள், அந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்னும் பலப்படுத்தும் நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளன.
'வாட்டர் இன்ஃப்ரெஸ்' சோதனைகள்
பெட்ரோல் சேமித்து வைக்கும் டேங்குகளில் தண்ணீர் கலந்திருக்கிறதா என்பதைக் கண்டறியவே இந்த 'வாட்டர் இன்ஃப்ரெஸ்' சோதனைகள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. அதேபோல, குளோரைடு, சல்பைடு சோதனைகள் குறிப்பிட்ட சில ரசாயனக் கலப்படங்களைக் கண்டறிய உதவுகின்றன.
எரிபொருளில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளது.