பழைய பிளாஸ்டிக் டிரம், பிவிசி (PVC) ஸ்கிராப், ஃபேக்டரி கழிவுகள் போன்றவற்றை இந்த தொழிலுக்கு மூலப்பொருட்களாகப் பயன்படுத்துகிறார்கள். இவற்றை ஸ்கிராப் டீலர்கள் அல்லது தொழிற்சாலைகளிடமிருந்து வாங்கிக்கொள்ளலாம். இவற்றுடன், பைப்புக்கு நிறம் கொடுக்க கலர் மாஸ்டர்பேட்ச், ஸ்டெபிலைசர்கள், லூப்ரிகன்ட்கள், ஃபில்லர் பொருட்கள் மற்றும் சில பிராசஸிங் கெமிக்கல்களும் தேவைப்படும்.
இந்த கலவைதான் பைப்புக்கு உறுதியையும், நீடித்து உழைக்கும் தன்மையையும், நல்ல நிறத்தையும் கொடுக்கிறது. முதலில், சேகரித்த பழைய பிளாஸ்டிக் டிரம் அல்லது பிவிசி ஸ்கிராப்பை நன்றாக சுத்தம் செய்வார்கள். தூசி, மண் போன்றவற்றை நீக்கிய பிறகு, அவற்றை கிரஷர் மெஷினில் போட்டு சின்ன சின்ன துண்டுகளாக மாற்றுவார்கள்.