ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் வேண்டுமா..டோல் பிளாசாவில் அழுக்கு டாய்லெட் படம் அனுப்பினால் போதும்!

Published : Feb 13, 2026, 08:57 AM IST

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) "Clean Toilet Picture Challenge" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், புகைப்படம் எடுத்து அனுப்பும் பயணிகளுக்கு ₹1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் வழங்கப்படும்.

PREV
15
பாஸ்டேக் ரீசார்ஜ் சலுகை

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் மக்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் National Highways Authority of India (NHAI) புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. “Clean Toilet Picture Challenge” என்ற இந்த திட்டம் மூலம் டோல் பிளாசாக்களில் உள்ள கழிப்பறைகள் சுத்தமில்லாமல் இருந்தால், அதை புகைப்படமாக அனுப்பும் பயணிகளுக்கு ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2026 ஜூன் 30 வரை நடைமுறையில் இருக்கும்.

25
டோல் பிளாசா டாய்லெட் புகார்

பயணிகள் இந்த சலுகையை பெறுவதற்கு Rajmargyatra App-இன் சமீபத்திய பதிப்பை தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். டோல் பிளாசாவில் சுத்தமில்லாத டாய்லெட்டை தெளிவாக படம் எடுத்து, அந்த ஆப்பில் ஜியோ-டேக் செய்யப்பட்ட தகவலுடன் பதிவேற்ற வேண்டும். பெயர், இடம், வாகன பதிவு எண் (VRN), மொபைல் எண் ஆகிய விவரங்களும் அவசியம்.

35
நெடுஞ்சாலை சுத்தம்

ஒரே கழிப்பறைக்கு ஒரு நாளில் ஒருவருக்கே பரிசு வழங்கப்படும். அதாவது, ஒரே இடத்தை பலர் புகார் செய்தாலும், முதலில் பதிவேற்றியவருக்கே ரூ.1,000 ரீசார்ஜ் கிடைக்கும். புகைப்படத்தில் நேர விவரமும் தெளிவாக இருக்க வேண்டும். போலியான அல்லது பழைய புகைப்படங்கள் ஏற்கப்படமாட்டாது.

45
டோல் பிளாசா சுத்தம்

அனைத்து புகைப்படங்களும் AI தொழில்நுட்பம் மற்றும் அதிகாரிகள் மூலம் சரிபார்க்கப்படும். திட்டம் NHAI பராமரிக்கும் டோல் பிளாசா கழிப்பறைகளுக்கு மட்டுமே பொருந்தும். பெட்ரோல் பங்க், ஹோட்டல் அல்லது தனியார் இடங்களின் டாய்லெட்டுகள் இதில் சேர்க்கப்படவில்லை.

55
2026 ஜூன் வரை செல்லுபடியாகும்

பயணிகளின் பங்களிப்பை ஊக்குவித்து, சுத்தமான நெடுஞ்சாலைகளை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு புகைப்படம் சமூக நலனுக்கு உதவுவதோடு, உங்களுக்கே ஒரு சிறிய நன்மையையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories