சரசரவென சவரனுக்கு ரூ.2400 வரை குறையப்போகுது தங்கம்.! வெளியான முக்கிய தகவல்!!

Published : Dec 05, 2024, 08:24 AM ISTUpdated : Dec 05, 2024, 10:34 AM IST

Gold Rates: நாட்டில் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் கிடு கிடுவென உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், விரைவில் தங்கத்தின் விலை குறைய உள்ளதாக பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

PREV
14
சரசரவென சவரனுக்கு ரூ.2400 வரை குறையப்போகுது தங்கம்.!  வெளியான முக்கிய தகவல்!!
Gold Jewellery

நாட்டில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வரும் நிலையில், கிட்டத்தட்ட தேர்தல் முடிவுகளுக்கு நிகராக தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம் தொடர்பான செய்திகளும் தினமும் முக்கியத்துவம் பெறுகின்றன. காரணம், தங்கத்தின் விலையை தினம் தினம் அறிந்து கொள்ள மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்த அளவிற்கு பொதுமக்கள் மத்தியில் தங்கத்தின் மீதான ஆர்வம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாகக் கருதப்படுகின்றது. 

24
Gold Rates Share Market

இந்தியாவில் முதலீட்டுக்கான தளங்கள்

இந்தியாவில் பொதுமக்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் வைப்பு நிதியாகவோ (Fixed Deposit), தபால் நிலையங்களில் (Post Office Scheme) அரசு திட்டங்களாகவோ, ரியல் எஸ்டேட் (Real Estate), பங்குசந்தை (Share Market) என பல்வேறு தளங்களில் முதலீடு செய்யலாம். ஆனால் இவை அனைத்தும் குறுகிய கால பயன்பாட்டிற்கு உகந்தது கிடையாது. முதலீடு செய்து சில வருடங்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் இதன் மீதான முதலீடுகளில் சிலவை ஆபத்தானதும் கூட. 

34
Gold Investment

ஆனால் தங்கம் அப்படியானது கிடையாது. நாம் வாங்கும் தங்கம் குறுகிய காலத்திலேயே நல்ல லாபத்தைத் தரக்கூடியது. உதாரணமாக வங்கிகளில் முதலீடு செய்யும் பட்சத்தில் நமது பணம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் அதற்கு குறைவான வட்டியே கிடைக்கும் என்பதால் மதிப்பு அவ்வளவு சீக்கிரம் உயர்ந்து விடாது. 

அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் அதன் மதிப்பும் நாளுக்கு நாள் உயரும், நமக்கான லாபமும் ஒவ்வொரு நாளும் கணிசமாக உயரும். 

44
Anand Srinivasan on gold investment

ஆனந்த் சீனிவாசன்

இதனிடையே பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில். தங்கத்தின் விலை வருகின்ற மார்ச் மாதம் வரை தினமும் ரூ.100, 200 என ஏற்றம் இறக்கமாகவே பயணிக்கும். ஆனால் கணிசமாக பார்க்கும் பொழுது சுமார் ரூ.2,500 வரை குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அதன் பின்னர் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தான் செய்யும். மேலும் தங்கத்தில் ஏற்கனவே முதலீடு செய்தவர்கள், மதிப்பு குறைந்துவிடுமே என்று அச்சமடைய வேண்டாம். இது குறுகிய காலத்தில் நடைபெறக் கூடியது. ஆனால் விரைவில் ஒரு கிராம் தங்கம் ரூ.10,000 வரை செல்ல வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories