குடை விற்பனை
மழைக்காலம் என்று வந்தாலே நாம் முதலில் யோசிப்பது குடைகளும், குளிரை போக்கவோ அல்லது நனையாமல் இருக்கவோ தோடுவது மழைக்கால ஆடைகள் தான். குடை மற்றும் கம்பளி ஆடைகள் தேவையில்லாத மனிதர்கள் என்று யாரும் இல்லை, இல்லையா? அதனால்தான் மழைக்காலத்தில் இந்த தொழில் உங்களுக்கு அருமையான லாபத்தைத் தரும். மழைக்கால ஆடைகள், குடைகளை நீங்களே தயாரித்து சந்தையில் விற்கலாம். அல்லது மொத்தமாக வாங்கி உள்ளூர் சந்தையில் விற்கலாம்.
மழைக்கால ஆடைகள், குடைகள் விற்பனை தொழிலை நீங்கள் வெறும் ரூ.10,000 முதலீட்டில் தொடங்கலாம். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மொத்த விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்களிடம் சென்று தேவையான பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்ய வேண்டும். அப்போது குறைந்த விலையில் கிடைக்கும். அப்படி வாங்கி வரும் குடைகள், மழைக்கால ஆடைகளை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கடைகளுக்கும், அல்லது நீங்களே ஒரு கடை விரித்து 20 சதவீத லாபத்தில் விற்கலாம்.
அதேவேளையில், உங்களுக்கு தையல் தெரிந்திருந்தால் நீங்களே குடைகள் மற்றும் மழைக்கால ஆடைகளைத் தயாரித்து விற்கலாம். இதன் மூலம் மேலும் லாபம் ஈட்டலாம். மும்பை, சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் மழைக்கால ஆடைகள், குடைகளுக்கான மூலப்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வந்து நீங்களே சொந்தமாகத் தயாரிக்கலாம். இதனால் செலவு மேலும் குறையும். இந்த தொழிலை மழைக்காலம் கடந்தும் நீங்கள் சற்று பெரிய அளவிலும் வணிகத்தை மேற்கொள்ள முடியும். ஒரு சிறிய குடிசைத் தொழில் போல் ஆரம்பித்து நடத்தலாம். இந்த தொழில் மூலம் நீங்கள் வேலைவாய்ப்பு பெறுவதோடு மட்டுமல்லாமல், வேறு நான்கு பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியவர்களாகவும் இருப்பீர்கள்.