வீட்டை கட்டிப்பாரு, கல்யாணம் பண்ணிப்பாரு என்ற வார்த்தைகள் நம் அன்றாட வாழ்க்கையில் கேள்வி பட்டிருப்போம். ஒரு 20 -30 வருடத்திற்கு முன்பு ரியல்எஸ்டேட் தொழில் அவ்வளவாக வளர்ச்சியடைந்ததில்லை. நிலம், வீட்டு மனை மிகக்குறைந்த விலையில் கிடைத்தன.
ஆனால், இப்போது ஒவ்வொரு இளைஞனின் கனவு ஒரு சொந்த வீட்டை கட்டியோ அல்லது வாங்கியோ முடித்துவிட வேண்டும் என்பதே. மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் கடன் வாங்கியே வீடு கட்ட வேண்டும் என்ற நிலை இப்போது உள்ளது.
விலைவாசி எந்த வேகத்தில் அதிகரித்து வருகிறதோ, அதே வேகத்தில் நிலம் மற்றும் வீடுகளின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்குவதோ அல்லது கட்டுவதோ மிகவும் கடினமாக உள்ளது. வீடு வாங்கவோ, கட்டவோ தேவையான லட்சக்கணக்கான பணத்தை ஒரே நேரத்தில் மொத்தமாக திரட்டுவது சாத்தியமில்லை. அவ்வளவு பெரிய தொகையை திரட்ட ஒரே வழி வீட்டுக் கடன் (Home Loan) மட்டும் தான்.
வீட்டு கடன் மூலம், வீட்டின் கனவை எளிதாக நிறைவேற்ற முடியும். வீட்டு கடன் என்பது ஒரு நீண்ட நாள் கடன் சுமை, வீட்டு கடன் எடுத்தவர்கள் நீண்ட காலத்திற்கு EMI அதாவது தவணைத் தொகையை செலுத்த வேண்டும். வீடு-மனைகள் விற்பனை அதிகரிப்பால் வீட்டுக் கடனுக்கான வட்டியும் வேகமாக உயர்ந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் வீடு வாங்குவதற்கு 20 முதல் 30 ஆண்டுகள் வரை கடன் வாங்குகிறார்கள்.
இதனால் EMI தொகை குறைவாகவும், வருமானத்தில் இருந்து EMI செலுத்திய பிறகு வீட்டுச் செலவுகளில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. அப்படி இருக்கும் போது நீங்கள் மலிவான வீட்டுக் கடன் அதாவது குறைந்த வட்டியில் கடன் வாங்க விரும்பினால் எந்த வங்கி இதில் முன்னணியில் உள்ளது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்?
குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்
பைசாபஜார்.காம் தரவுகளின்படி, இரண்டு அரசு வங்கிகள் மிகவும் குறைந்த வட்டியில் கடன்களை வழங்குகின்றன. இதில் முதலாவது யூனியன் பேங்க் ஆப் இந்தியா (Union Bank of India), இரண்டாவது பேங்க் ஆப் மகாராஷ்டிரா (Bank of Maharashtra). இந்த இரண்டு வங்கிகளிலும் 8.35% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் கிடைக்கிறது.
இந்த வங்கிகளில் இருந்து நீண்ட காலத்திற்கு வீட்டுக் கடன் வாங்கினால் லட்சக்கணக்கில் சேமிக்கலாம். சந்தை நிபுணர்களின் கூற்றுப்படி, தற்போது ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் (Repo rate) விகிதம் 6.5% ஆக உள்ளது மற்றும் வரும் காலங்களில் ரெப்போ விகிதம் குறைய வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் இந்த வங்கிகளின் வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
20 ஆண்டு வீட்டு கடனுக்கான EMI எவ்வளவு?
மேற் சொன்ன இரண்டு வங்கிகளில் ஏதேனும் ஒரு வங்கியில் இருந்து 20 ஆண்டுகளுக்கு 50 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்குவதாக வைத்துக் கொண்டால் 8.35% வட்டி வகிதத்தில் உங்கள் மாதாந்திர EMI 42,918 ரூபாயாக இருக்கும். மொத்த கடன் காலத்திலும் நீங்கள் 53,00,236 லட்சம் ரூபாய் வட்டியாக செலுத்த வேண்டும். இதன்படி மொத்தம் 1 கோடியே 03 லட்சத்து 236 ரூபாய் செலுத்த வேண்டும்.
SBI-PNB வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி எவ்வளவு?
அரசு வங்கிகளான ஸ்ட்டே பாங்க் ஆப் இந்தியா (SBI), பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), இந்தியன் வங்கி (IB), பாங்க் ஆப் இந்தியா (BOI), கனரா வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளும் (IOB) 8.40% வட்டி வகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. இந்த வங்கிகளில் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினால், 20 ஆண்டுகளுக்கு மாதாந்திர EMI மட்டும் 43,075 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன்; எப்படி வாங்குவது?
ஒரு வேலை உங்கள் சிபில் ஸ்கோர் 750 மேல் இருந்து 20 ஆண்டுகளுக்கு 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு 9.15 சதவீதம் வட்டி விதிக்கப்படுகிறது. எஸ்பிஐ உள்ளிட்ட அரசு சார்ந்த வங்கிகளில் மட்டும். அதன்படி EMI 27,282 ரூபாயாக இருக்கும். உங்கள் முழு கடன் காலத்திலும் 35 லட்சத்து 47 ஆயிரத்து 648 ரூபாய் வட்டி மட்டும் செலுத்த வேண்டும். இதில் மொத்த கட்டணம் 65 லட்சத்து 47 ஆயிரத்து 648 ரூபாயாக இருக்கும்.
உங்களது சிபில் ஸ்கோர் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் சற்று மாறுபடலாம். Floating வட்டி விகிதங்கள் தற்போதைய விகிதங்களை விட மிகக் குறைவாகவே இருக்கும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) போன்ற முன்னணி அரசு வங்கிகளின் வீட்டுக் கடன்கள் நேரடியாக ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா (RBI) ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கும் போது நாம் வாங்கும் வீட்டுக் கடன்களுக்கான வட்டியும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது