DA Hike: அகவிலைப்படி 3% உயர்வு! 63% டிஏ பெறும் அரசு ஊழியர்கள்! தமிழகத்தின் நிலை என்ன?

Published : Nov 10, 2026, 02:51 PM ISTUpdated : Nov 10, 2026, 03:02 PM IST

உத்தரகாண்ட் அரசு அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உயர்வை அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு என்ன கிடைக்கும் தெரியுமா?

PREV
18
அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி

பண்டிகை காலம் களைகட்டியுள்ளது. இந்த சூழ்நிலையில் ஒன்றன்பின் ஒன்றாக பல மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி வந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு உட்பட பல மாநில அரசுகள் தங்களது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (Dearness Allowance) உயர்த்துவதாக அறிவித்தன.

DA Hike: அகவிலைப்படி 3% உயர்வு! 63% டிஏ பெறும் அரசு ஊழியர்கள்! தமிழகத்தின் நிலை என்ன?

28
முதலில் மேற்கு வங்கம்.!

மேற்கு வங்கத்திலும் டிஏ உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் அம்மாநிலத்தின் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயனடைந்துள்ளனர்.

Kanda Sashti 2026 Day 2: கந்த சஷ்டி 2ஆம் நாள் விரதம்.! முருகப்பெருமானை வழிபட வேண்டிய முறைகள், விரதத்தின் சிறப்புகள், கிடைக்கும் பலன்கள்.!

38
மற்றொரு மாநிலத்திலும் அகவிலைப்படி உயர்வு

ஏற்கனவே மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் டிஏவை உயர்த்தியுள்ளன. தற்போது உத்தரகாண்ட் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% டிஏ மற்றும் டிஆர் உயர்த்த முடிவு செய்துள்ளது. இது பண்டிகை காலத்தில் அம்மாநிலத்தின் அனைத்து அரசு ஊழியர்கள் முகத்திலும் சிரிப்பை வரவழைத்துள்ளது.

Home Loan: வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு.! இ.எம்.ஐக்கு மேல் ரூ.2,000 கட்டினால் எவ்வளவு லாபம் தெரியுமா?

48
63 சதவீதமாக அதிகரிப்பு

முன்னதாக இந்த மாநில அரசு ஊழியர்கள் 60% அகவிலைப்படி பெற்று வந்தனர். தற்போது அது 63 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது இனிமேல் அந்த மாநில அரசு ஊழியர்களும் மத்திய அரசின் விகிதத்திலேயே அகவிலைப்படி பெறுவார்கள். தீபாவளி நேரத்தில் அரசின் இந்த முடிவால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உத்தரகாண்ட் அரசின் 3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் பலர் பயனடைவார்கள்.

How to Buy Your Own House: நடுத்தர மக்களுக்கு குட் நியூஸ்.! குறைந்த சம்பளத்திலும் சொந்த வீடு வாங்குவது எப்படி?

58
இவர்களுக்கெல்லாம் ஜாக்பாட்.!

இந்த உயர்த்தப்பட்ட டிஏ-வை மாநில அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியான ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சம்பள விகிதத்தின்படி சம்பளம் பெறுபவர்கள் பெறுவார்கள்.

Kanda Sashti Fasting 2026: மகா கந்த சஷ்டி விரதம் நவம்பர் 10-ல் தொடக்கம்! சூரசம்ஹாரம் எப்போது? விரதம் கடைப்பிடிக்கும் முறைகள் இதோ!

68
ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்

இந்த டிஏ உயர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. ஜூலை 1 முதல் அக்டோபர் 31, 2026 வரையிலான காலத்திற்கான டிஏ நிலுவைத் தொகை ஊழியர்களுக்கு ரொக்கமாக வழங்கப்படும் என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Change Your Budgeting Rule Today: பட்ஜெட் போடும் முறையை மாற்றுங்கள்.! இந்த 1 ரூல் போதும், உங்கள் நிதி நிலைமை தலைகீழாக மாறிவிடும்!

78
மேற்கு வங்கத்தின் தற்போதைய நிலை

சமீபத்தில் மேற்கு வங்க மாநில அரசு, டிஏவை ஒரேயடியாக 20% உயர்த்த முடிவு செய்தது. மேற்கு வங்க அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதத்தை எட்டியுள்ளது.

88
அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீதம் டிஏ உயர்வு

எனினும், மத்திய அரசு தனது அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீதம் டிஏ உயர்வை அறிவித்ததை தொடர்ந்து, அடுத்தடுத்து பல மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கான டிஏவை உயர்த்தி வரும் நிலையில், மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களில் ஒரு பகுதியினரும் மத்திய அரசின் விகிதத்தில் டிஏ வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய ஊதியக் குழு அமைப்பதற்கு முன், மேற்கு வங்க அரசு டிஏவை உயர்த்தும் என முதல்வர் பலமுறை வாக்குறுதி அளித்துள்ளார்.

தமிழக அரசு ஏற்கெனவே 3% உயர்வை அறிவித்துவிட்டது. அக்டோபர் 31, 2026 அன்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வெளியிட்ட அறிவிப்பின்படி, அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜூலை 1, 2026 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ஆண்டுக்கு ரூ.1,858 கோடி கூடுதல் செலவாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories