தீபாவளி பரிசு: அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு? எப்போது கிடைக்கும்?

Published : Sep 18, 2025, 08:27 AM IST

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படலாம். இந்த உயர்வு CPI-IW குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

PREV
15
தீபாவளி டிஏ அறிவிப்பு

மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியத்தார்களுக்கு தீபாவளிக்கு முன் மகிழ்ச்சி தரும் செய்தி வந்துள்ளது. ஜூலை-டிசம்பர் 2025 காலத்திற்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது. இதனால் தற்போது உள்ள 55% அகவிலைப்படி 58% ஆக உயர வாய்ப்பு உள்ளது. இந்த உயர்வு நடைமுறைக்கு வந்தால், சுமார் ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியத்தார்களின் வருமானத்தில் நேரடி தாக்கம் ஏற்படும்.

25
ஓய்வூதியர் உயர்வு

அகவிலைப்படி வருடத்தில் இருமுறை திருத்தப்படுகிறது. ஜனவரி-ஜூன், ஜூலை-டிசம்பர் என தனித்தனி காலங்களில் உயர்வு அறிவிக்கப்படுகிறது. 2025 மார்ச் மாதத்தில், ஜனவரி-ஜூன் காலத்திற்கு 2% உயர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது 53% இருந்த அகவிலைப்படி 55% ஆக உயர்ந்தது. இப்போது ஜூலை-டிசம்பர் 2025 காலத்திற்கு மேலும் 3% உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

35
டிஏ உயர்வு 2025

அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால், ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பலன் மாறுபடும். உதாரணமாக, ஓய்வூதியர் ஒருவரின் அடிப்படை ஓய்வூதியம் ரூ.9,000 என்றால், 55% DA-வில் ரூ.4,950 கிடைக்கும். மொத்த ஓய்வூதியம் ரூ.13,950 ஆகும். ஆனால் 58% ஆக உயர்ந்தால், ரூ.5,220 ஆகி மொத்தம் ரூ.14,220 ஆகும். அதாவது மாதந்தோறும் ரூ.270 அதிகரிக்கும்.

45
58 சதவீத டிஏ

அதேபோல, அடிப்படை சம்பளம் ரூ.18,000 உள்ள அரசு ஊழியர், தற்போது ரூ.27,900 சம்பளம் பெறுகிறார். DA 58% ஆனால் ரூ.28,440 ஆகும். இதன் மூலம் அவருக்கு மாதந்தோறும் ரூ.540 கூடுதல் நன்மை கிடைக்கும். DA உயர்வை கணக்கிடுவது CPI-IW (Consumer Price Index for Industrial Workers) அடிப்படையில் செய்யப்படுகிறது.

55
மத்திய அரசு ஊழியர் சம்பளம்

அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் முந்தைய ஆண்டுகளின் போக்கை பார்த்தால், நவராத்திரிக்கு பிறகு, தீபாவளிக்கு முன் அறிவிப்பு வருவது வழக்கம். இந்த ஆண்டு கூட அதே போக்கில், மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்தார்களுக்கும் தீபாவளி பரிசாக இந்த 3% உயர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories