Gold Price Today Sep 17: கொஞ்சம் கீழே இறங்கி வந்த சொக்கத் தங்கம்.! இன்று வாங்குவது லாபமா.?!

Published : Sep 17, 2025, 09:42 AM IST

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்ததால், இல்லத்தரசிகள், திருமணத்திற்காக நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்த விலை மாற்றங்கள் முதலீட்டாளர்களுக்கும் ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

PREV
12
காலையிலேயே வந்த சந்தோஷ செய்தி.!

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ஏற்றத் தாழ்வுகளை சந்தித்த நிலையில், இன்றைய சரிவு இல்லத்தரசிகள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமண விழாக்கள் மற்றும் நகை வாங்கும் சீசன் காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகம் வருகை தரும் இந்நேரத்தில் தங்க விலை குறைந்தது பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதான் இன்றைய விலை நிலவரம்

சென்னையில் ஆபணரத்தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 10 ஆயிரத்து 270 ரூபாயாக உள்ளது. சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 82,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 142 ரூபாயாக உள்ளது. 1 கிலோ பார்வெள்ளி ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையில் ஏற்பட்ட இந்த சரிவு பெரும்பாலும் தொழில்துறைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. தங்கம் போலவே வெள்ளியும் முதலீட்டில் முக்கிய பங்கு வகிப்பதால் முதலீட்டாளர்கள் இந்த விலை சரிவை பயன்படுத்திக்கொள்ளலாம் என சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

22
தங்கம் விலையை முடிவு செய்யும் சர்வதேச காரணங்கள்.!

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை ஆகியவை தங்கம், வெள்ளி விலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, பங்குச் சந்தை நிலைமை மற்றும் சர்வதேச முதலீட்டு ஓட்டங்கள் மாறும் போது, தங்கம் மற்றும் வெள்ளி விலை உடனடியாக மாற்றம் அடைவது இயல்பானது. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் திருமண காலங்களில் தங்கம் வாங்கும் அளவு அதிகமாக இருப்பதால், விலை சரிவு குடும்பங்களின் பொருளாதாரத்திற்கு சதகமாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories