செப். 22 முதல் மாறும் உங்கள் செலவுகள்! என்னென்ன மாறப்போகிறது? செக் பண்ணுங்க

Published : Sep 17, 2025, 11:55 AM IST

செப்டம்பர் 22 முதல் புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் (GST Rates) அமலுக்கு வருவதால், எண்ணெய், சோப்பு, மருந்துகள் போன்ற பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைகிறது.

PREV
15
ஜிஎஸ்டி குறைப்பு

செப்டம்பர் 22 முதல் புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த முறை அரசு பல முக்கிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் எண்ணெய், சோப்பு, ஷாம்பு, மருந்துகள் போன்ற பல பொருட்கள் மலிவாகக் கிடைக்கின்றன. பொதுமக்களின் செலவுகளை குறைக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு பெரும் நிம்மதியை அளிக்கிறது.

25
ஜிஎஸ்டி விகிதம்

செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புதிய வரி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் பேக் செய்யப்பட்ட உணவு, பியூட்டி பொருட்கள், சுகாதார உபயோக பொருட்கள் போன்றவை அடங்கும். இதனால் மக்கள் அன்றாடம் வாங்கும் பல பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், கடைகளில் ஏற்கனவே உள்ள பழைய ஸ்டாக் உடனடியாக புதிய விலையில் விற்க முடியாது.

35
அன்றாட பொருட்கள்

காரணம், பேக்கிங்கில் அச்சிடப்பட்ட விலையை மாற்ற நேரம் எடுக்கும். இதனால், அரசு கடைக்காரர்களுக்கு தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு புதிய விலை குறித்த முழுமையான தகவலை வழங்கி, சரியான விலைக்கு பொருட்களை விற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-க்கு முன்னதாக, அனைத்து நிறுவனங்களும் மற்றும் கடைக்காரர்களும் தங்கள் விளம்பரங்களில், கடைகளில் புதிய விலைப்பட்டியலை வெளியிடுங்கள் வேண்டும்.

45
ஜிஎஸ்டி கவுன்சில்

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எந்தெந்த பொருட்களின் விலை குறைந்துள்ளது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். மருந்து கடைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதத்தில் வரும் மருந்துகளின் புதிய விலையை வெளிப்படையாக கடைகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இல்லையெனில் வாடிக்கையாளர்கள் அரசின் தள்ளுபடியின் பலனை பெற முடியாது.

55
புதிய வரி விகிதம்

ஹோட்டல் வாடகை மீதும் அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது. இனி ஒரு நாளுக்கு ரூ.7,500 அல்லது அதற்கும் குறைவான வாடகை உள்ள ஹோட்டல் அறைகளுக்கு 5% ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படும். முன்னதாக அத்தகைய அறைகளுக்கு உரிமையாளர்கள் ITC கோரினால் 18% ஜிஎஸ்டி வசூலிக்கலாம் என அனுமதி இருந்தது. ஆனால் இப்போது அந்த வாய்ப்பு நீக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.7,500-க்கும் குறைவான அறைகளில் தங்குவது மலிவாகி, பொதுமக்களுக்கு நிச்சயமாக நன்மை கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories