இந்தியாவில் அரிசி, பருப்பு, எண்ணெய் என அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது. விலை உயர்வால் பரிதவிக்கும் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது டிமார்ட் (D-Mart). இங்கு நீங்கள் வீட்டு உயயோக பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை வாங்கும்போது தள்ளுபடி விலையில் வழங்கப்படுவதால் பணத்தை நிறைய சேமிக்க முடியும். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், ஓசூர், திருப்பூர் என பல்வேறு இடங்களில் டிமார்ட் கிளைகள் அமைந்துள்ளன.
டிமார்ட் கிளைகளில் சிறப்பு விற்பனை
இப்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டிமார்ட் கிளைகளில் சிறப்பு விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. டிமார்ட்டில் சிறப்பு தள்ளுபடி விற்பனையாக பல்வேறு பொருட்கள் ரூ.99 முதல் விறபனை செய்யப்பட்டு வருகின்றன. கோடை வெயிலைச் சமாளிக்கத் தேவையான வாட்டர் பாட்டில்கள் மற்றும் ஜூஸ் ஜாக்குகள் வெறும் ₹49 முதல் ₹149 வரையிலான விலையில் விற்பனையாகின்றன.