மே 1 முதல், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சுமார் ரூ.1000 உயர்த்தியுள்ளன. இந்த திடீர் விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஏற்றார் போல இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
25
ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை நிர்ணயம்
அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
35
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு
ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், மே 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.993 உயர்த்தப்பட்டதை அடுத்து 3,237 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ஏறியதா? இறங்கியதா? என்பதை பார்ப்போம். அதாவது வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.928க்கு விற்பனையாகிறது.
55
உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம்
ஏற்கனவே நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பதற்றம் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனையால் பல ஹோட்டல்கள் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரேயடியாக சுமார் ரூ.1000 அளவுக்கு உயர்ந்திருப்பது வியாபாரிகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.