வந்தே பாரத் ரயில்களில் இதுவரை இருக்கைகள் மட்டுமே இருக்கும் நிலையில், படுக்கை வசதி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக ஹவுரா - குவஹாத்தி இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் இயக்கப்படுகிறது.
மேலும் இந்த ரயில்கள் முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. இதில் சென்னையில் இருந்து டெல்லிக்கு ஒரு ரயில் இயக்கப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இப்போது சென்னையில் இருந்து டெல்லிக்கு நேரடியாக வந்தே பாரத் ரயில் ஏதுமில்லை.
24 மணி நேரத்தில் டெல்லி செல்லலாம்
சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 32 மணி நேரம் செல்கிறது. மேலும் சென்னையில் இருந்து இயக்கப்படும் நிஜாமுதின் துரந்தோ எக்ஸ்பிரஸ் டெல்லியை 28 மணி நேரம் 5 நிமிடத்தில் சென்றடைகிறது.
சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் 24 மணி நேரம் முதல் 26 மணி நேரத்தில் டெல்லி சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.