தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஷாக் நியூஸ்; மத்திய அரசு முக்கிய முடிவு!

Published : Dec 12, 2024, 05:24 PM IST

அரசின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கில், 2025-26 நிதியாண்டிலிருந்து தங்கப் பத்திரத் திட்டம் நிறுத்தப்படலாம். திட்டத்தின் நோக்கம் மீறப்பட்டுள்ளதாகவும், அரசின் கடன் சுமையை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

PREV
15
தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஷாக் நியூஸ்; மத்திய அரசு முக்கிய முடிவு!
Sovereign Gold Bond scheme

இந்தியாவில் தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாக கருதப்படுகிறது. பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழலில் தான் கடந்த 2015 ஆம் ஆண்டு தங்க பத்திர திட்டம் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

25
Sovereign Gold Bond scheme

டிஜிட்டல் முறையில் தங்கப் பத்திரங்கள் மூலம் தங்கத்தை வாங்குவது பாதுகாப்பான முறையாக கருதப்பட்டது. மேலும் இந்த திட்டத்தின் முதிர்வு காலத்தின் முடிவில் வட்டியுடன் சேர்த்து தங்கப் பத்திரத்திற்கான முதலீட்டை அரசு திருப்பி அளிக்கப்படும்.  சில்லறை முதலீட்டாளர்களை நேரடி தங்கத்திலிருந்து டிஜிட்டல் தங்கத்திற்கு மாற்றுவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது..

இந்த சூழலில் தங்கப் பத்திரத் திட்டம் (SGB) அடுத்த நிதியாண்டிலிருந்து (2025-26) நிறுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அரசாங்கம் தங்க கடனுக்கான GDP விகிதத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

35
Sovereign Gold Bond scheme

மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது இந்தத் திட்டம் "அதன் நோக்கத்தை மீறிவிட்டது" என்றும் அரசாங்கத்தின் நிதிச்சுமையை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார். தங்க பத்திர திட்டத்தின் முதலீட்டாளர்களுக்கு தங்கத்திற்கு நிகரான மதிப்பை முதிர்ச்சியின் போது திருப்பிச் செலுத்த வேண்டியது அரசின் கடமை.

இதனால் இந்த திட்டம் முதிர்வடையும் போது அரசுக்கு திருப்பி செலுத்தும் தொகை அதிகரிக்கிறது. 2027 நிதியாண்டு முதல் கடன்-ஜிடிபி விகிதத்தை நிலையான முறையில் குறைக்கும் அரசு முயற்சித்து வருகிறது. எனவே திட்டத்தைத் தொடர்வது தேவையற்றது என்று அரசு கருதுகிறது.” என்று தெரிவித்தார்.

45
Sovereign Gold Bond scheme

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் கடன் குறைப்பு உத்தி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதிப் பற்றாக்குறையை 2026 நிதியாண்டில் 4.5 சதவீதத்திற்கும் குறைவாகவும், 2027 நிதியாண்டில் கடன்-ஜிடிபி விகிதம் குறைவதையும் நோக்கமாகக் கொண்டது.

2025-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.18,500 கோடி ஒதுக்கப்பட்ட போதிலும், இடைக்கால பட்ஜெட்டில் ரூ.26,852 கோடியாக இருந்தபோதும், 2025 நிதியாண்டில் புதிய தங்கப்பத்திரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடைசியாக பிப்ரவரி 2023 இல் தங்கப்பத்திரங்களை வழங்கியது, இதன் மதிப்பு ரூ.8,008 கோடி.

55
Sovereign Gold Bond scheme

மார்ச் 2023க்குள் ரூ. 4.5 டிரில்லியன் நிலுவைத் தொகையுடன் தங்கப்பத்திரம் திட்டத்தின் கீழ் மொத்த வெளியீடு ரூ.45,243 கோடியாக இருந்தது. அதன் நிதிச்சுமையைக் குறைக்க, மே 2017 மற்றும் மார்ச் 2020க்கு இடையில் வழங்கப்பட்ட பத்திரங்களை முன்கூட்டியே மீட்டெடுப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

தங்கப் பத்திரங்கள் எட்டு வருட முதிர்வு காலத்தைக் கொண்டுள்ளன, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பகுதியளவு திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது. வட்டி விகிதங்கள் ஆரம்பத்தில் 2.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது, பின்னர் 2.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories