வீட்டில் அவசர தேவைகள் ஏற்பட்டால், பெற்றோர் அல்லது குடும்பத்தின் மூத்தவர்கள் தங்களது ஏடிஎம் அட்டையையும் ரகசிய எண்ணையும் நெருங்கியவர்களுடன் பகிர்வது புதிதல்ல. அவர்கள் உயிருடன் இருக்கும் வரை இது சாதாரண நடைமுறையாகவே கருதப்படுகிறது. ஆனால் கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகும் அதே கார்டு அல்லது இணைய வழி பரிவர்த்தனையை (நெட் பேங்கிங்) பயன்படுத்துவது, பலருக்குத் தெரியாத சட்ட சிக்கலை உருவாக்கக்கூடும்.
25
வங்கி கணக்கு
வங்கி விதிகளின்படி, ஒரு நபர் இறந்ததும் அவரது வங்கி கணக்கு தொடர்பான பயன்பாட்டு உரிமைகள் மாற்றமடைகின்றன. ஏடிஎம் கார்டு, இணைய வங்கி சேவை அல்லது யுபிஐ போன்ற வசதிகளை தொடர்ந்து பயன்படுத்துவது சட்ட ரீதியாக கேள்விக்குறியாகலாம். காரணம், கணக்கில் உள்ள பணம் ஒரே நபருக்கு சொந்தமானதாக அல்லாமல், சட்ட வாரிசுகள் மற்றும் உரிமை கோருபவர்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
35
நாமினி விதி
பலரிடம் காணப்படும் பொதுவான தவறு, “நான் நாமினி என்பதால் நேரடியாக பணம் எடுக்கலாம்” என்ற எண்ணமே. ஆனால் நாமினி மட்டும் உரிமை போதுமானதல்ல. முதலில் வங்கிக்கு மரண தகவலை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றாமல் ஏடிஎம் வழியாக பணம் எடுப்பது, பின்னர் புகார் எழுந்தால் மோசடி குற்றச்சாட்டாக பார்க்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இதற்குப் பின்னால் உள்ள நோக்கம், இறந்தவரின் பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதே. ஒரே குடும்பத்தில் பல சட்ட வாரிசுகள் இருக்கக்கூடும். அவர்களின் உரிமைகள் பாதிக்கப்படாமல் இருக்க வங்கிகள் மரணச் சான்றிதழ், நாமினி விவரம் மற்றும் பிற ஆவணங்களை சரிபார்த்த பிறகே பணத்தை வெளியிடுகின்றன. இந்த நடைமுறை, எதிர்கால குடும்பத் தகராறுகளையும் சட்டப் பிரச்சினைகளையும் தவிர்க்க உதவுகிறது.
55
பணம் பெறும் நடைமுறை
எனவே, குடும்பத்தில் யாராவது உயிரிழந்தால் பதற்றத்தில் ஏடிஎம் அல்லது யுபிஐ பயன்படுத்துவதை தவிர்ப்பது அவசியம். முதலில் வங்கிக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் அளித்து, கோரிக்கை படிவம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். சரியான நடைமுறையை பின்பற்றினால், பணமும் பாதுகாப்பாக கிடைக்கும்; தேவையற்ற சட்ட சிக்கல்களும் தவிர்க்கப்படும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.