ஏடிஎம்மில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்! மே 1 முதல் அமல்!

ATM withdrawal interchange fees: ஏடிஎம் பரிமாற்றக் கட்டணங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. மே 1, 2025 முதல் பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

ATM withdrawals to get costlier from May 1 as RBI raises interchange fees sgb
ATM interchange fees

நீங்கள் அடிக்கடி ஏடிஎம்-க்கு பணம் எடுக்கச் சென்றால், இந்த செய்தி உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும். ஏடிஎம் பணம் எடுப்பதற்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட உள்ளது. ஏடிஎம் பரிமாற்றக் கட்டணங்களை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. இது மே 1, 2025 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

ATM withdrawals to get costlier from May 1 as RBI raises interchange fees sgb
RBI raises ATM fees

ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, மே 1ஆம் தேதி முதல், வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி நெட்வொர்க் தவிர, பிற வங்கி ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பரிவர்த்தனை செய்தால் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பணம் எடுப்பது மட்டுமில்லை, இருப்புத்தொகையை சரிபார்த்தாலும் கட்டணம் செலுத்த வேண்டும்.

சென்னையைக் கலக்கப் போகும் ஏசி எலெக்ட்ரிக் பஸ்! வைரல் போட்டோஸ்!


ATM withdrawal rules

தற்போது, கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம் தவிர பிற ஏடிஎம்களைப் பயன்படுத்துவதற்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இது மே 1 முதல் மேலும் அதிகரிக்கப் போகிறது. இந்த அதிகரிப்பு, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) முன்மொழிவின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி கட்டணத்தை அனுமதித்துள்ளது.

ATM interchange fees

இதுவரை, வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கியின் ஏடிஎம்மிற்கு பதிலாக வேறு நெட்வொர்க்கின் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தால், அவர்கள் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.17 கட்டணம் செலுத்த வேண்டும். இது மே 1 முதல் ரூ.19 ஆக அதிகரிக்கும். இதுதவிர, வேறு வங்கியின் ஏடிஎம்மிலிருந்தும் பேலன்ஸ் செக் செய்வதற்கு ரூ.6 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது இனி ரூ.7 ஆக அதிகரிக்கப்படும். 

ATM monthly free withdrawal limit

வங்கி பயனர் தனது மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்பிற்குப் மேல் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கும்போது இந்தக் கட்டணங்கள் பொருந்தும். மெட்ரோ நகரங்களிலும் பிற நிலை நகரங்களிலும் மாதாந்திர இலவச பரிவர்த்தனைகளின் வரம்பு வங்கிக்கு வங்கி மாறுபடும்.

ஆப்பிள் iOS 19 ஜூன் மாதம் ரிலீஸ்! அட்டகாசமான AI அப்டேட் வரப்போகுது!

ATM withdrawal interchange fees

பரிமாற்றக் கட்டணம் அதிகரிப்புக்கு என்ன காரணம் என்பதையும் வாடிக்கையாளர்ங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களில் ஒருவர் மற்றொரு வங்கியின் ஏடிஎம்மைப் பயன்படுத்தி பணம் எடுக்கும்போது, அந்த வங்கி மற்றொரு வங்கிக்கு செலுத்தும் தொகைதான் பரிமாற்றக் கட்டணம் ஆகும்.

Latest Videos

vuukle one pixel image
click me!