Published : Mar 27, 2025, 10:10 AM ISTUpdated : Mar 27, 2025, 10:14 AM IST
Gold Rate in Tamilnadu: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நடுத்தர மக்களை கவலையடைய செய்துள்ளது. இன்றைய தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது என்பதை பார்ப்போம்.
தங்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. குறிப்பாக பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். அந்த வகையில் மற்ற நாட்டு மக்களைவிட இந்திய மக்களிடம் தான் டன் கணக்கில் தங்க நகைகளில் முதலீடு செய்து அதிகளவில் வாங்கி குவித்துள்ளனர். தங்க நகைகளை ஆடம்பர பொருளாக இருந்தாலும் திருமணங்கள், விஷேச நாட்களின் தங்க நகைகளின் பயன்பாடு அதிகமாக இந்தியாவில் உள்ளது. எனவே தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தங்க நகைகளை வாங்கி வருகின்றனர்.
25
தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு
இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா போர், காசா-இஸ்ரேல் மோதல் மற்றும் டிரம்ப் வரி விதிப்பு முடிவுகளால் சந்தைகள் நிலையற்றதாக உள்ளன. இதனால் தங்கத்தில் முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கம் ஜெட் வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 3 மாதங்களில் தங்கம் சரசரவென உயர்ந்து வரலாறு காணாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது ஒரு சவரன் ரூ. 65,000க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. எனவே தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் நடுத்தர மக்கள் தங்க நகைகளை வாங்க முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் குறைந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.65,560-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.8,195-க்கு விற்பனையானது.
45
சென்னையில் தங்கம் விலை
இன்றைய (மார்ச் 27) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.65,880-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,235-க்கு விற்பனையாகிறது.
55
வெள்ளி விலை
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் வெள்ளி ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.111,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.