இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்.. வங்கிக்கு போகலாமா? வேண்டாமா?

Published : Jan 27, 2026, 09:40 AM IST

ஜனவரி 27, 2026 அன்று, 5 நாள் வேலைவாரம் கோரி United Forum of Bank Unions (UFBU) அகில இந்திய வங்கி வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. வங்கிகளில் சேவைகள் பாதிக்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
15
ஜனவரி 27 வங்கி ஸ்ட்ரைக்

இன்று (ஜனவரி 27, 2026) நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. காரணம், United Forum of Bank Unions (UFBU) அறிவித்துள்ள அகில இந்திய வங்கி வேலைநிறுத்தம். இது அரசு அறிவித்த அதிகாரப்பூர்வ வங்கி விடுமுறை அல்ல. இருந்தாலும், பல வங்கிகளில் ஊழியர்கள் பணியில் ஈடுபடாததால் பொதுமக்களுக்கு சிரமம்.

25
வங்கிகள் திறந்திருப்பதா, மூடப்பட்டதா?

ஆர்பிஐ (RBI) விடுமுறை பட்டியலில் இன்று வங்கி விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை. அதனால் தொழில்நுட்ப ரீதியில் வங்கிகள் மூடப்படவில்லை. ஆனால் வேலைநிறுத்தம் காரணமாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா போன்ற வங்கிகளில் சேவைகள் பாதிக்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

35
எந்த சேவைகள் பாதிக்கப்படும்?

கிளை வங்கி கவுண்டர் சேவைகள், காசோலை பரிவர்த்தனை, புதிய கணக்கு திறப்பு, ஆவணச் சேவைகள் போன்றவை தாமதமாகலாம். ஆனால் ATM, UPI, இணைய வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

45
ஏன் இந்த வேலைநிறுத்தம்?

வங்கி ஊழியர்களுக்கான 5 நாள் வேலைவாரம் (திங்கள்–வெள்ளி) அமல்படுத்த வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கை. 2015ல் 2வது, 4வது சனிக்கிழமை விடுமுறை அளிப்பதாக ஒப்பந்தம் இருந்தாலும், முழுமையாக அமலாகவில்லை. 2023 தினசரி வேலை நேரம் 40 நிமிடம் அதிகரிப்பதற்கு, சனிக்கிழமைகளை விடுமுறையாக அறிவிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

55
ஏன் இப்போது போராட்டம்?

இந்த முன்மொழிவு கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசின் அனுமதி இல்லாமல் நிலுவையில் இருப்பதாக UFBU குற்றம் சாட்டுகிறது. அதனால் முன்பு ஒத்திவைக்கப்பட்ட வேலைநிறுத்தம் இன்று மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அவசர வங்கி பணிகளை டிஜிட்டல் சேவைகள் மூலம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories