Today Gold Rate: சர்வதேச காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தங்கம், வெள்ளி விலையை கேட்டாலே மக்கள் மிரண்டு ஓடும் அளவுக்கு விலை போட்டி போட்டுக்கொண்டு விலை உயர்ந்து வருகிறது.
25
உச்சத்தில் விலை
அந்த வகையில் கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை என இரண்டு வேலையிலும் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்ப்போம்.
35
நேற்று தங்கம் விலை
நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,025க்கும், சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ரூ.1,20,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்றைய (ஜனவரி 27) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.1,19,680ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.16,320ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.130,560ஆக விற்பனையாகிறது.
55
வெள்ளி விலை புதிய உச்சம்
தங்கத்தின் விலை தான் இப்படி என்றால் வெள்ளி விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு 12 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் விலை ரூ.387க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.387,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.