இந்த வருடம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. சவரனுக்கு 44 ஆயிரத்தை கடந்தது.
இது நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், நகை விற்பனை மட்டும் குறையவில்லை. கடந்த சில நாட்களாக தங்க விலை ஏறியும், இறங்கியும் வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,650க்கும் விற்பனையானது.
இன்றைய (ஏப்ரல் 16) நிலவரப்படி, நேற்றைய தங்கத்தின் விலையே இன்றும் தொடர்கிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,500 குறைந்து ரூ.81,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.