Gold Rate Today : மக்களே தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்தது.!

Published : Apr 15, 2023, 10:03 AM IST

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் இறக்கம் கண்ட நிலையில் இன்று தங்கம் சவரன் ரூ.560 ரூபாய் அதிரடியாக குறைந்தது. 

PREV
14
Gold Rate Today : மக்களே தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்தது.!

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், நேற்று தங்கம் உயர்ந்து வந்த நிலையில் இன்று சரசரவென குறைந்துள்ளது. 

24

நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.45,760க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5.720க்கு விற்பனையானது.

34

இன்றைய (ஏப்ரல் 15) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5.650ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,114ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,912ஆக விற்பனையாகிறது.

44

வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.1.50 காசுகள் குறைந்து ரூ.81.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 81,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories