Gold Rate Today : குட்நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை.. இதுதான் நகை வாங்க சரியான நேரம்.. முந்துங்கள்.!

First Published Apr 13, 2023, 10:10 AM IST

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.400 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. அக்ஷய திருதி நெருங்குவதால் வரும் நாட்களில் தங்கம் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், நேற்று தங்கம் உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. 

நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.45,440க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.5.680க்கு விற்பனையானது.

இன்றைய (ஏப்ரல் 13) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32  குறைந்து ரூ.45,408ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.5.676ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,131ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 49,048ஆக விற்பனையாகிறது.

வெள்ளி ஒரு கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.80.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 81,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

click me!