பிசினஸில் கலக்கும் ராதிகாவின் அஞ்சலி மெர்ச்சண்ட்.. குடும்ப சொத்து மதிப்பு இவ்வளவா?

First Published | Aug 17, 2024, 12:47 PM IST

ராதிகா மெர்ச்சන්ட்டின் சகோதரி மற்றும் ஆனந்த் அம்பானியின் மைத்துனி அஞ்சலி மெர்ச்சன்ட்டை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Anjali Merchant Radhika Merchant

ஆனந்த் அம்பானி திருமனத்தில் ராதிகா மெர்ச்சண்டின் சகோதரி அஞ்சலி மெர்ச்சண்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தன் அழகால் அனைவரின் இதயங்களையும் வென்ற அஞ்சலி மெர்ச்சண்ட், தனது புத்திசாலித்தனத்தாலும் அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளார். ஆம். அஞ்சலி மெர்ச்சண்ட் ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யத்தையும் சிறப்பாக நிர்வகித்து வருகிறார். ராதிகா மெர்ச்சන්ட்டின் சகோதரி மற்றும் ஆனந்த் அம்பானியின் மைத்துனி அஞ்சலி மெர்ச்சன்ட்டை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Anjali Merchant Radhika Merchant

இந்திய பார்மா துறையில் புகழ்பெற்ற என்க்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் வீரேன் மெர்ச்சண்டிற்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் தான் அஞ்சலி மெர்ச்சண்ட்,. அஞ்சலி மற்றும் அவரது சகோதரி ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்தின் வணிகத்தில் அவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

Tap to resize

Anjali Merchant Radhika Merchant

அஞ்சலி மெர்ச்சண்ட், தி கேத்தட்ரல், ஜான் கானன் பள்ளி, எக்கோல் மொண்டியல் வேர்ல்ட் பள்ளியில் தனது கல்வியை முடித்தார். அதன் பிறகு அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள வெல்லெஸ்லியில் உள்ள பாப்சன் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். அதுமட்டுமின்றி லண்டன் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏவும் முடித்துள்ளார். இதுமட்டுமின்றி, அமெரிக்காவின் வர்ஜீனியா பல்கலைக்கழகத்திலும் வணிக நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். 

Anjali Merchant Radhika Merchant

அஞ்சலி 2014 முதல் 2016 வரை என்க்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டுப் பொது மேலாளராகப் பணியாற்றினார். 2012 முதல் 2014 வரை மார்க்கெட்டிங் மற்றும் கிளையன்ட் அவுட்ரீச் நிர்வாகியாகவும் பணியாற்றினார். இவை தவிர, அஞ்சலி ஹேர் ஸ்டைலிங் மற்றும் ட்ரைஃபிக்ஸ் என்ற பெயரில் ஹேர் ட்ரீட்மென்ட் பிசினஸையும் நடத்தி வருகிறார். மைலூன் மெட்டல்ஸ் என்ற நிறுவனத்திலும் இயக்குநராக உள்ளார். 

Anjali Merchant Radhika Merchant

அஞ்சலி மெர்ச்சன்ட் 2020 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் அமன் மஜிதியாவை மணந்தார். அமன் மஜிதியா ஆன்லைன் சில்லறை விற்பனை பிராண்டான Vataly நிறுவனத்தின் நிறுவனர். மேலும், என்க்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இணை இயக்குநராகவும் உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்..

Anjali Merchant

அஞ்சலி மெர்ச்சன்ட்டின் சொத்து மதிப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை, ஆனால் அவரது தந்தை வீரேந்திர மெர்ச்சன்ட்டின் நிகர மதிப்பு சுமார் ரூ.755 கோடி. அதே நேரத்தில் அவரது தாயார் சைலா மெர்ச்சன்ட்டின் நிகர மதிப்பு ரூ.10 கோடி. நிறுவனத்தின் ஆண்டு வருவாய் சுமார் ரூ. 200 கோடி. இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ. 2000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வீரேன் மெர்ச்சன் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Latest Videos

click me!