சென்னையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த தியாகராஜன் எப்போதுமே சமத்துவத்தை பற்றி அதிகம் சிந்தித்துக் கொண்டே இருப்பார். சென்னையில் இளங்கலை மற்றும் முதுகலை மட்டத்தில் கணிதம் படித்த அவர், கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் சேர்ந்து படித்தார்.
1961 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த தியாகராஜன், 20 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். அது தனது வேலை இல்லை என்பதை உணர்ந்த அவர், தனது 37 வது வயதில், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஸ்ரீராம் சிட்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார்.