அதிகரிக்கும் தங்கத்தை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? பிரபலங்கள் கொடுத்த ஷாக் தகவல்!

First Published | Aug 17, 2024, 12:26 PM IST

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள், அமெரிக்க பொருளாதார புத்துயிர், வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்பு உள்ளிட்டவை விலை உயர்வுக்குக் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், அமெரிக்க பணவீக்கம் எதிர்பார்த்த அளவு குறையாதது தங்கத்தின் எதிர்கால விலை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

Anand Srinivasan explains gold price moment

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.53,360-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,000-ஆக விற்பனையாகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உலக அளவில் அதிகரித்து வருகிறது. மேலும் இது நீடிக்குமா? அல்லது தங்க விலை குறையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

gold rate

தங்கம் விலை உயர்வுக்கான முக்கிய காரணங்கள் பற்றி சலானி நகைக்கடை உரிமையாளர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார். அதில், புவிசார் அரசியல் பதட்டங்களான மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் விரிவாக்கம், போர் நிறுத்த ஒப்பந்தம் இதுவரை எட்டப்படவில்லை. மேலும் அமெரிக்க மேக்ரோ தரவுகள் அமெரிக்க பொருளாதாரம் புத்துயிர் பெற்று வருகிறது.

Tap to resize

Jayanthilal Challani

செப்டம்பர் கூட்டத்திலிருந்து மத்திய வங்கி வட்டி விகிதக் குறைப்பு சுழற்சிக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றது. Bears ஷார்ட் கவரிங் மற்றும் Bulls எதிர்ப்புப் புள்ளியாக புதிய வாங்குதல் ஆகியவை எல்லா நேரத்திலும் உச்சநிலையான 2483 US Dollar/ Ounce ஐ விஞ்சியது” என்று கூறினார். பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை குறித்து பேசியுள்ளார்.

Anand Srinivasan

அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில், நேற்று அமெரிக்காவில் பணவீக்கம் குறித்த அறிக்கை ஒன்று வெளியானது. எல்லாரும் 2.5% குறையும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவு குறையவில்லை. அதுமட்டுமின்றி வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்க மத்திய வங்கி வட்டியை நிச்சயம் குறைக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே தான் தங்கத்தை விலை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

Latest Videos

click me!