8வது ஊதியக் குழு அப்டேட்: ரூ.18,000 குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு உயரும்?

Published : Aug 06, 2025, 03:59 PM IST

8வது ஊதியக் குழுவின் கீழ் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். புதிய சம்பளம் 2026 இறுதியில் அல்லது 2027 தொடக்கத்தில் அமலுக்கு வர வாய்ப்புள்ளது.

PREV
14
மத்திய அரசு ஊழியர் சம்பளம்

8வது ஊதியக் குழுவின் கீழ் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.51,000 ஆக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய மதிப்பீட்டின்படி, குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.30,000 வரை மட்டுமே உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சராசரி சம்பள உயர்வு 13% ஆக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

24
8வது ஊதியக் குழு

சம்பள உயர்வில் முக்கியமான அம்சம் ஃபிட்மென்ட் பேக்டர். 7வது ஊதியக் குழுவில் இது 2.57 ஆக இருந்தது. 8வது குழுவில் இது 1.8 ஆக இருக்கலாம் என கோடக் ஈக்விடீஸ் அறிக்கை தெரிவிக்கிறது. இதனால் சம்பளத்தில் பெரிய அளவில் உயர்வு இருக்காது என்ற கருத்து நிலவுகிறது. அரசு 2025 ஜனவரியில் குழுவை அமைப்பதாக அறிவித்தது. ஆனால் அதன் விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

34
ஊதிய உயர்வு 2027

உறுப்பினர்கள் நியமனமும் நடைபெறவில்லை. அறிக்கை சமர்ப்பிக்க சுமார் 1.5 ஆண்டுகள் ஆகலாம். ஒப்புதல் மற்றும் அமலாக்கம் ஆகியவற்றுக்கு மேலும் 3-9 மாதங்கள் ஆகலாம். இதனால் 2026 இறுதியில் அல்லது 2027 தொடக்கத்தில் புதிய சம்பளம் அமலுக்கு வர வாய்ப்புள்ளது. 8வது ஊதியக் குழுவால் அரசுக்கு ரூ.2.4 லட்சம் கோடியில் இருந்து ரூ.3.2 லட்சம் கோடி வரை சுமை ஏற்படலாம்.

44
குறைந்தபட்ச ஊதிய உயர்வு

இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6%–0.8% ஆகும். குறிப்பாக சி-கிரேடு ஊழியர்கள் (மொத்த மத்திய அரசு ஊழியர்களில் 90%) அதிக பலன் பெறுவார்கள். சம்பள உயர்வால் நுகர்வோர் பொருட்கள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மீதான செலவுகள் அதிகரிக்கலாம். தேசிய சேமிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, வங்கி வைப்புத்தொகை மற்றும் பிற சொத்துக்களில் முதலீடுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories