புதிய காரின் விலை அதிகமாக இருக்கும் போது, பழைய கார்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன. பழைய கார்கள் பல ஆயிரங்களை மிச்சப்படுத்துகின்றன, மேலும் EMI மற்றும் இன்ஷூரன்ஸ் கட்டணங்களும் குறைவாக இருக்கும்.
இன்றைக்கு வீடு, வேலை, வழியெல்லாம் கார் வேணும். ஆனால் மிடில் கிளாஸ் மக்களுக்கு ‘புதிய கார்’ன்னா ரொம்ப தூரம் போல தான் தோணும். ஆனா யுஸ்டு கார்களை வாங்கினா பல ஆயிரங்கள் மிச்சமாகும். கரைக்டா சொல்லனும்னா பைக் விலையில் கார் வாங்கி கலக்கலாம்.
26
ஓல்டு இஸ் கோல்டு
புதிய கார்னா ஓடம்பு நல்லா இருந்தாலும் விலை நல்லா இருக்காது. ஆமாங்க ரூ.10 லட்சம் வச்சா தான் நம்ம ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார வாங்க முடியும். ஆனா அதே கார் 3 வருஷம் பழையது என்றால் ரூ.5.5 – ரூ.6 லட்சத்துல தூக்கி தருவாங்க. ஏர் பேக் உள்ளிட்ட லேட்டஸ்ட் பாதுகாப்பு அம்சங்களும் உங்களுக்கு கிடைக்கும்.
36
இன்ஷூரன்ஸ்ல மிச்சம் – வட்டி மட்டுமில்லை, வாடிக்கையும் மாறும்!
புதிய கார் இன்ஷூரன்ஸ் கட்டணமா இருக்கும் – ₹20,000 க்கு மேல். ஆனா பழைய கார் இன்ஷூரன்ஸ்? அப்படியே பாதியா குறைந்து ₹10,000 – ₹12,000 தான்! பராமரிப்பு கூட தள்ளு வண்டி மாதிரி இல்ல. Maruti, Hyundai மாதிரி கார் வாங்கினா ஸ்பேர் பார்ட்ஸ் கடையிலேயே கிடைக்கும். மிச்சமாகும் காசை அப்படியே சேவிங்ஸ்ல போட்டுக்கலாம்.
புதிய கார் EMI வச்சா 5–7 வருஷம் நம் சம்பளத்தை காலியாக்கும். ஆனா பழைய கார் வாங்கினா ₹3–5 லட்சம் வரை தான் லோன். EMIயும் கம்மி, காலமும் குறைவு. மிட்டாய் வாங்கும் மாதிரி கட்டிக்கலாமே தவிர, மூச்சு அடைக்குற வட்டிய கட்டத்தேவையில்லை.
56
போதும் ரெண்டு ஏர்பேக் – போகணும் நமக்கு பாதி விலை!
நம்மக்கு எல்லா வசதியும் வேணும், ஆனா விலை பாதியா இருக்கனும்தானே. அப்போ 2019 Swift or i20 வாங்கினா Power Windows, Touch Screen, Reverse Camera, ABS எல்லாமே இருக்கு. ஆனா விலை? புதிய Swiftக்கு ₹8.5 லட்சம் என்றா, பழைய Swift ₹4.5–₹5.5 லட்சத்துல எல்லா வசதியும் கிடைக்கும்.!
66
நம்புற இடத்துல வாங்குனா tension-um கிடையாது
Maruti True Value, Hyundai H Promise, Mahindra First Choice மாதிரி நம்பகமான showroomல certified கார் வாங்கினா 1 வருட warranty கூட தருறாங்க. மிச்சம் வேணுமா? வசதியும் வேணுமா? EMIயும் கம்மியா இருக்கணுமா? – அப்போ புதிய கார் போல அனுபவிக்க பழைய கார் வாங்கு!