2 பேங்க் மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை.. உங்கள் வங்கியும் லிஸ்டில் இருக்கா?

Published : Aug 06, 2025, 02:08 PM ISTUpdated : Aug 06, 2025, 02:09 PM IST

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இரண்டு வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. இந்த நடவடிக்கை ஆகஸ்ட் 4 அன்று அறிவிக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.

PREV
15
ரிசர்வ் வங்கி நடவடிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது முதல் நடவடிக்கையாக இரண்டு வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வங்கி விதிமீறல்களைக் காரணமாகக் கொண்டு, ஒரு வங்கிக்கு ரூ.2 லட்சமும் மற்றொன்றுக்கு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

25
விதிமீறல்

2024 மார்ச் 31-ஆம் தேதி, நபார்டு மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து இந்த வங்கிகளைச் சரிபார்க்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் போது சில முக்கிய விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து, வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பதில்கள் மற்றும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதற்கேற்ப அபராதம் விதிக்கப்பட்டது.

35
ரூ.2 லட்சம் அபராதம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள கோமதி நகரிய சககாரி வங்கி மீது, 100% ரிஸ்க் வெயிட் உடன் புதிய கடன்கள் வழங்கியதும், SBI விட அதிக வட்டி விகிதத்தில் FD வழங்கியது காரணமாக ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது RBI-யின் மேற்பார்வை நடவடிக்கை கட்டமைப்பு விதிகளை மீறுவதாக கூறப்பட்டுள்ளது.

45
ரூ.25,000 அபராதம்

ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் மத்திய கூட்டுறவு வங்கி மீது ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி, தன் கடனாளர்களின் விவரங்கள் 4 தனிப்பட்ட கடன் தகவல் நிறுவனங்களுக்கு (CICs) வழங்காததால், RBI விதிகளை மீறியது என கூறப்பட்டுள்ளது.

55
வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு இல்லை

இந்த அபராத நடவடிக்கைகள் நிர்வாக ரீதியாக மட்டுமே உள்ளன. வாடிக்கையாளர்களின் சேமிப்பு, FD, பரிவர்த்தனை செயல்களில் எந்த பாதிப்பும் இல்லை என RBI உறுதியளித்துள்ளது. எனவே, இந்த வங்கிகளில் கணக்குள்ளவர்களுக்கு கவலையில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories