Published : Aug 06, 2025, 11:52 AM ISTUpdated : Aug 06, 2025, 11:55 AM IST
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த பங்குகள் மீது சிறிய முதலீட்டாளர்கள் அதிக லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதலீடு செய்கின்றனர். டாடா குழும நிறுவனங்கள் மீதான நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் விருப்பங்கள் வேகமாக மாறிக்கொண்டே இருக்கின்றன. முன்பு எஸ்பிஐ, ரிலையன்ஸ் போல் பரபரப்பாக இருந்த பங்குகளை விட தற்போது டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க், வோடபோன் ஐடியா போன்ற பங்குகள் தான் அதிக பேர் வாங்கிக் கொண்டிருப்பது பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
25
டாடா மோட்டார்ஸ்
2025 ஜூன் மாதம் மட்டும் 67.5 லட்சம் பேர் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) பங்குகளை வைத்திருக்கிறார்கள். இது 2020-ல் இருந்த எண்ணிக்கையை விட 3.4 மடங்கு அதிகம், 2015-இன் எண்ணிக்கையை விட 15 மடங்காக அதிகம் ஆகும். சமீப காலத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் இதுவாகும்.
35
யெஸ் பேங்க், வோடபோன் ஐடியா பங்குகள்
யெஸ் பேங்க் (Yes Bank) - 63.6 லட்சம் பங்குதாரர்கள் (2025 வரை)
வோடபோன் ஐடியா (Vodafone Idea) - 61.8 லட்சம் பங்குதாரர்கள்
2020-இன் ஒப்பீட்டில் இந்த இரண்டு பங்குகளும் மல்டிபிள் டைம்சாக வளர்ச்சி கண்டுள்ளன. ஏனெனில், இந்த பங்குகள் மலிவாக கிடைக்கின்றன. சிறிய முதலீட்டிற்கு, பெரிய லாபத்தின் எதிர்பார்ப்பு உள்ளது.
Suzlon Energy (56 லட்சம்), Tata Power (45.1 லட்சம்), NTPC, NHPC போன்ற நிறுவனங்கள் அதிக பங்குதாரர்களைப் பெற்றுள்ளன. குறிப்பாக டாடா குழும நிறுவனங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஒரு பங்கின் மீது அதிக பேர் முதலீடு செய்வது, அது நல்ல பங்குதான் என்பதற்கான உறுதி அல்ல.
55
முதலீடு செய்பவர்கள்
அந்த பங்குகள் ஏற்கனவே அதிக விலையில் இருக்கலாம். எனவே, முதலீடு செய்வதற்கு முன் நிதி ஆலோசகரை சந்தித்து பேசுவது நல்லது. இக்கட்டுரை தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. முதலீட்டு முடிவுகளுக்கு உங்கள் நிதி ஆலோசகரின் அறிவுரையைப் பெற்ற பிறகு செயல்படுங்கள்.