சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.9380 ஆகவும், சவரனுக்கு ரூ.75,040 ஆகவும் உயர்ந்துள்ளது. சர்வதேச நிலவரம் மற்றும் அமெரிக்காவுடனான உறவு போன்ற காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளி விலை சிறிது அதிகரித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடத்த வர்க்கத்தினரும், திருமணம் உள்ளிட்ட விசேஷம் வைத்துள்ளவர்களும் கவலை அடைந்துள்ளனர்.
23
ரூ.75 ஆயிரத்தை தாண்டியது தங்கம்
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ரூ.9380 வாக உள்ளது. சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 75,040 ரூபாயாக உள்ளது. இதனை தொடர்ந்து தங்கம் விலை 75 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 126 ரூபாயாகவும், 1 கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது.
33
எப்போது தங்கம் விலை குறையும்?!
சர்வதேச நிலவரம், அமெரிக்காவுடனான உறவு போன்றவை இந்திய சந்தைகளில் எதிரொலிக்கிறது. அமெரிக்காவின் வரிவிதிப்பில் தளர்வு போன்றவை அறிவிக்கப்படும் பட்சத்தில் தங்கம் விலை மீண்டும் சரிவடையும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விலை ரீடைல் சந்தையிலும் எதிரொலிக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவோர் திட்டமிட்டு வாங்குவது அவசியம். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ன் வரி விதிப்பு திட்டம், உலக நாடுகள் உடனான அமெரிக்காவின் நடப்புறவில் ஏற்படும் விரிசல் ஆகியவை சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதேபோல் அமெரிக்காவில் அதீத கடன் மற்றும் நிதி பற்றாக்குறை அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சிக்கலாக மாறும் என முதலீட்டாளர்கள் நம்புவதாலும் தங்கம் மீதான முதலீட்டு அதிகரிக்க வழிவகுத்துள்ளது.