இனி DA-HRA தொடருமா? நிறுத்தப்படுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

Published : Nov 21, 2025, 10:36 AM IST

புதிய கமிஷன் அமலுக்கு வந்த பிறகு DA, HRA, TA போன்ற அலவன்சுகள் நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கான முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

PREV
14
8வது ஊதியக் குழு தகவல்

சமீபத்தில் மத்திய அரசு 8வது ஊதியக் குழுவிற்கான குறிப்பு விதிமுறைகள் (ToR)-ஐ வெளியிட்டுள்ளது. இதனால் புதிய கமிஷன் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டதை உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 3 பேர் கொண்ட குழு செயல்பட உள்ளது. இந்தக் குழுவிற்கு 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 2027 நடுப்பகுதியில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே மத்திய அமைச்சரவை விவாதித்து இறுதி ஒப்புதல் அளிக்கும். இதைத் தொடர்ந்து ஊழியர்களிடம் எழும் முக்கிய கேள்வி – “DA, HRA, TA போன்ற அலவன்சுகள் நிறுத்தப்படுமா?” என்பதாகும்.

24
மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம்

8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2027ல் வெளியானாலும், அவை 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்ததாக கருதப்படும். அதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் புதிய சம்பளத்தை பின்னர் பெறுவார்கள். ஆனால் அரியர்ஸ் 2026 ஜனவரி 1 முதல் கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ஊழியர்களுக்கு நன்மை தாமதமாக கிடைத்தாலும், அரியர்ஸ் தொகை தொடர்ந்து சேர்க்கப்படும். தற்போது பல மத்திய அரசுப் பணியாளர்கள், “8வது பே கமிஷன் வந்த பிறகு DA, HRA, TA நிறுத்தப்படுமா?” என்ற அச்சத்துடன் உள்ளனர்.

34
ஊதியக் குழு புதிய தகவல்

இப்போது நடப்பு DA 58% (2025 ஜூலை 1 முதல்). அடுத்த DA உயர்வு 2027 ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வரும். இதனால்தான் பலர் இந்த மாற்றங்களால் அவர்களின் அலவன்சுகள் குறையும் என்ற பயத்தில் உள்ளனர். ஆனால் நிபுணர்கள் கூறுவது வேறுபட்டது. DA, HRA, TA மற்றும் பிற அலவன்சுகள் முற்றிலும் நிறுத்தப்படும் வாய்ப்பு இல்லை. 8வது ஊதியக் குழு அமலுக்கு வரும் வரை 7வது சம்பள கமிஷன் விதிப்படி எல்லா அலவன்சுகளும் தொடரும். DAவும் வழக்கம்போல் ஒவ்வொரு 6 மாதத்திலும் உயர்த்தப்படும். DA உயர்வை நிறுத்த அரசு எந்த அறிவிப்பு வெளியிடவில்லை என்பது முக்கியம்.

44
சம்பள கமிஷன் அறிக்கை

ஊதியக்குழு இயக்குனர் ராமச்சந்திரன் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்ததாவது, “சம்பள கமிஷன் அறிக்கை தயாரிக்க குறைந்தது 18 மாதங்கள் எடுத்துக்கொள்ளும். இந்த காலத்தில் DA மூன்று முறை உயர்த்தப்படும். இது 6 மாதத்திற்கு ஒருமுறை DA உயர்த்தப்படும் விதி காரணமாகும். ஒவ்வொரு உயர்வும் சுமார் 3% என கணக்கிட்டால், தற்போதைய 58% DA அடுத்த 18 மாதங்களில் 67% வரை சென்று சேரலாம். இது வெறும் மதிப்பீடு மட்டுமே; உண்மையான உயர்வு CPI அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்” என்று கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories