தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிவை சந்தித்துள்ளன. சர்வதேச பங்குச்சந்தை மீட்சி, டாலர் மதிப்பு உயர்வு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.
சமீப நாட்களில், தங்கத்தின் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் உயர்ந்திருந்த தங்கம் தற்போது குறைவடைந்துள்ளது. இன்றைய காலை வர்த்தகத்தில் ஆபரணத்தங்கம் ரூ.320 வரை குறைந்து, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.91,680க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.11,460 ஆக குறைந்துள்ளது. இதேபோல வெள்ளிவிலையும் ஒரு கிராமுக்கு ரூ.169 ஆக குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,69,000க்கு விற்பனையாகிறது. ஆக தங்கத்துக்கும் வெள்ளிக்கும் போட்டி நடக்குது. யாரு அதிகமாக குறையுறதுன்னு.
23
விலை சரிவிற்கான முக்கிய காரணங்கள்
சர்வதேச பங்குச்சந்தை மீட்சியால் நடக்கும் மாற்றம், உலகளவில் முதலீட்டாளர்கள் தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துக்களில் இருந்து பங்குச்சந்தைக்கு திரும்பி வருகிறார்கள். இது தங்கத் தேவை குறைவதற்கான முக்கிய காரணமாகும்.
அமெரிக்க டாலர் வலிமை – டாலர் விலையின் திடீர் உயர்வு தங்கத்தின் சர்வதேச விலை குறைவுக்குக் காரணமாகியுள்ளது.
பெடரல் ரிசர்வ் வட்டி கொள்கை – வட்டி விகிதங்கள் நிலைத்திருக்கும்போது தங்கத்தில் முதலீடுகள் குறைவாகும் போக்கு உள்ளது.
இந்தியாவில் நுகர்வோர் தேவை குறைவு – பண்டிகை சீசன் முடிந்த பின் நகை வாங்குதல் சற்று தளர்வடைந்துள்ளது.
33
இப்போது தங்கம் வாங்கலாமா?
பெரியளவில் முதலீடு செய்வதற்கு இது சரியான நேரம் அல்ல என்றே பார்க்கப்படுகிறது. தங்கம் வாங்குதவற்கு இன்னும் சில நாட்கள் காத்திருக்கலாம் என்றும் தங்கம் விலையை நிர்ணயம் செய்வதில் சர்வதேச மார்க்கெட் நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன எனவும் முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். 6 மாதம் முதல் 1 வருடத்திற்குள் தங்கம் மீண்டும் உயரும் வாய்ப்பு உள்ளதால் நீண்டகால நோக்கில் சீரான அளவில் வாங்குவது புத்திசாலித்தனம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே தங்கத்தில் முதலீடு செய்வதில் நிதானம் தேவை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.