நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகள் செயலற்றதாக மாற்றப்படும். ஆனால், அந்தப் பணத்தை நீங்கள் எளிதாக திரும்பப் பெறலாம். அது எப்படி என்பதை விரிவாக இங்கு தெரிந்து கொள்வோம்.
இப்போதெல்லாம் அனைவருக்கும் ஒன்றல்ல ஒரு சில வங்கி கணக்குகள் இருக்கும். வேலை மாற்றம், நகரம் மாறுதல், அல்லது புதிய வங்கிக்குச் செல்லுதல் போன்ற காரணங்களால் பலர் தங்கள் பழைய கணக்குகளை முற்றிலும் மறந்துவிடுகிறார்கள். நீண்ட காலமாக பணபரிவர்த்தனை இல்லாமல் இருந்தால், அக்கவுண்ட் ‘செயலற்றது’ அல்லது ‘டெட் அக்கவுண்ட்’ என்று வங்கி வகைப்படுத்தப்படும். இந்த கணக்குகளில் இருக்கும் பணத்தை மீண்டும் பெற முடியுமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். ஆனால் கவலை வேண்டாம். அக்கவுண்ட் எத்தனை வருடம் பழையதானாலும், அந்த பணத்தின் முழு உரிமையும் உங்களுக்குத்தான்.
25
செயலற்ற வங்கி கணக்கு
ஒரு வங்கிக் கணக்கில் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பரிவர்த்தனை இல்லை, அது ‘இன்ஆக்டிவ்’ ஆகவும், நான்கு ஆண்டுகளுக்கு மேல் செயல்பாடில்லாததால் ‘டார்மண்ட்’ ஆகவும் மாற்றப்படுகிறது. இது வங்கிகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கை. இதனால் மோசடி வாய்ப்பு குறையும். ஆனால் பணம் எடுக்க வேண்டுமெனில், முதலில் அக்கவுண்டை ரி-ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதற்காக உங்களது வங்கி கிளையில் எழுத்து மூலமான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
35
இன்ஆக்டிவ் அக்கவுண்ட் ரீஆக்டிவேட்
அந்த விண்ணப்பத்துடன் ஆதார், பான், பாஸ்புக், செக் புக் அல்லது வேறு ஏதாவது செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களைக் கொடுக்க வேண்டும். வங்கி அதிகாரிகள் இவற்றை சரிபார்த்து, தேவையானால் KYC அப்டேட் செய்வார்கள். இந்த செயல்முறை முடிந்தவுடன், அக்கவுண்ட் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். அதன் பிறகு ATM, கவுண்டர், UPI என எந்த முறையிலும் நீங்கள் பணத்தை எளிதில் எடுத்துக்கொள்ளலாம்.
இப்போது பல வங்கிகள் ஆன்லைன் மூலமாகவும் டெட் அல்லது இன்ஆக்டிவ் அக்கவுண்ட்களை செயல்படுத்தும் வசதியை வழங்குகின்றன. உங்கள் மொபைல் நம்பர் அந்த கணக்குடன் இணைந்திருந்தால், நெட் பேங்கிங் அல்லது மொபைல் ஆப் மூலம் KYC அப்டேட் செய்து, தேவைப்பட்டால் வீடியோ KYC-யும் செய்து முடிக்கலாம். இது கிளைக்கு நேரில் செல்ல நேரமில்லாதவர்களுக்கு மிகவும் உதவிகரமானது.
55
வங்கி பணம் பெறும் நடைமுறை
ஆனால் பழைய ஆவணங்கள் இல்லை, பாஸ்புக் கிடைக்கவில்லை, மொபைல் நம்பர் மாற்றியிருக்கிறேன் என்ற கவலை வேண்டாம். உங்கள் பழைய கையொப்பம், வங்கியில் இருக்கும் ரெக்கார்ட்கள், அக்கவுண்ட் விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வங்கி மீண்டும் உங்கள் அடையாளத்தை உறுதிசெய்யும். கணக்கில் அதிக தொகை இருந்தால் சில கூடுதல் ஆவணங்களை கேட்கலாம். அனைத்தும் சரிபார்க்கப்பட்டவுடன், உங்கள் பணத்தை எந்த தடையுமின்றி பெறலாம்.