8வது ஊதியக் குழு: யாருக்கு அதிக சம்பள உயர்வு கிடைக்கும்?

Published : Aug 21, 2025, 10:16 AM IST

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்த எதிர்பார்ப்புகளும், 7வது ஊதியக் குழு குறித்த அறிவிப்புகளும் குறித்த செய்தி எப்போது வெளியாகும் என்று அனைத்து அரசு ஊழியர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

PREV
15
அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு வந்தால் உடனே பேசப்படும் முக்கிய விஷயம் ஊதியக் குழு (Pay Commission) தான். தற்போது 8வது ஊதியக் குழு பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஆனால், இதுவரை அரசு அதிகாரப்பூர்வமாக குழுவை அமைக்கவில்லை. இருந்தாலும், முந்தைய குழுக்களின் பரிந்துரைகள், தற்போதைய நிலைமைகள் அடிப்படையில் ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து கணிப்புகள் வெளியாகின்றன.

25
7வது ஊதியக் குழு

Fitment Factor தான் முக்கியம் சம்பள உயர்வை தீர்மானிப்பதில் Fitment Factor மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. 7வது ஊதியக் குழுவில் அடிப்படை சம்பளம் ₹18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 8வது குழுவில் அது ₹41,000 முதல் ₹51,480 வரை இருக்கக்கூடும் என ஊகிக்கப்படுகிறது. அதனால், குறிப்பாக தாழ்வுநிலை ஊழியர்களுக்கு சதவீத அடிப்படையில் அதிக உயர்வு கிடைக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

35
Pay Level 1 – தாழ்வுநிலை பணியாளர்கள்

மிகக் குறைந்த அளவிலான ஊதியம் பெறுபவர்கள் Pay Level 1 ஆகும். இதில் பொதுவாக Group D பணியாளர்கள் அடங்குவர். இவர்களின் ஆரம்ப அடிப்படை சம்பளம் ₹18,000 ஆக உள்ளது. இதில் MTS (Multi Tasking Staff), பியூன் (Peon), துப்புரவு பணியாளர், வாட்ச்மேன் போன்ற பணியாளர்கள் உள்ளனர்.

45
Pay Level 3 – காவல் மற்றும் அலுவலகப் பணிகள்

இந்த நிலைத்தில் காவல்துறை அல்லது ராணுவத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள், Senior Clerk, சில தொழில்நுட்ப பணியாளர்கள் அடங்குவர். மேலும் சில மாநிலங்களில் பஞ்சாயத்து செயலாளர் (Level 3 அல்லது 5) இந்தப் பட்டியலில் வருகின்றனர். இவர்களுக்கு அடுத்த ஊதியக் குழுவில் நல்லளவு உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

55
Pay Level 4 – மேல்நிலை அலுவலக பணிகள்

இந்த நிலை Lower Division Clerk, Senior Stenographer, Data Entry Operator (Grade B) போன்ற பணியாளர்களை உள்ளடக்குகிறது. இவர்களின் அடிப்படை சம்பளம் ₹25,500 முதல் துவங்குகிறது. இவர்களின் பொறுப்பு Pay Level 3-வை விட அதிகம் என்பதால், சம்பள உயர்வும் கூடுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories