தமிழக அரசு ஆன்லைன் சொத்து பதிவு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம், வீட்டிலிருந்தே பதிவு நடவடிக்கைகளை எளிதில் முடிக்க முடியும், மோசடிகள் தவிர்க்கப்படும்.
தமிழகத்தில் ஆன்லைன் சொத்து பதிவு – புதிய கதவு திறந்த பதிவு துறை!
தமிழக அரசு பதிவு துறையின் மூலம் சொத்து பதிவில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஆன்லைன் சொத்து பதிவு திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், சப்-ரஜிஸ்ட்டர் அலுவலகங்களில் நேரில் சென்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமே இல்லை. வாங்குபவர்கள் மற்றும் டெவலப்பர்கள் வீட்டிலிருந்தபடியே பதிவு நடவடிக்கையை எளிதில் முடிக்க முடியும்.
26
மோசடிகள் முற்றிலும் தவிர்க்கப்படும்.!
முதலாவது விற்பனைக்கு வரும் சொத்துகள் குறித்த பதிவுகளை, விற்பனையாளர்கள் மற்றும் டெவலப்பர்கள் நேரடியாக ஆன்லைனில் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து முடிக்கலாம். சப்-ரஜிஸ்ட்ரார் அலுவலக அதிகாரிகள் அவற்றை சரிபார்த்து, சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்குவார்கள். இத்திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான கைரேகை மற்றும் கண்புகை (Iris) சோதனை இணைக்கப்பட உள்ளது. இதனால், போலி ஆவணங்கள், முகமாற்று மோசடிகள் போன்றவை முற்றிலும் தவிர்க்கப்படும். மேலும், கட்டிடத் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பயோமெட்ரிக் சாதனங்களை பயன்படுத்துவது கட்டாயமாகும்.
36
நேரத்தை மிச்சப்படுத்தலாம்.!
இந்த வசதி, 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆரம்பத்தில் விருப்பத்திற்குரியதாக இருக்கும் இந்த நடைமுறை, பிற்பாடு கட்டாயமாகும் வாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் அலுவலக நெரிசல் குறைந்து, மக்கள் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலும் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பதிவு செய்யும் சிரமம் முற்றிலும் குறைய வாய்ப்பு அதிகம்.
இந்த திட்டத்தின் மூலம் ஊழல் கட்டுப்பாடு, தாமதம் தவிர்ப்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவை உறுதி செய்யப்படும். குறிப்பாக இடம் விற்பனை மற்றும் வீட்டு டீலிங்களில் அடிக்கடி ஏற்படும் குற்றச்செயல்கள், போலி ஆவணங்கள், இரட்டை விற்பனைகள் போன்றவை பெரிதும் குறையும் என அரசு நம்புகிறது.
56
எப்போது வேண்டுமானாலும் சரிபார்க்கலாம்
இந்த திட்டத்தின் மூலம் சிறிய முதலீட்டாளர்கள், வீட்டை வாங்கும் குடும்பங்கள் ஆகியோர் அதிகமாகப் பயன்பெறுவார்கள். ஒரே சொத்தை ஒருவருக்கு விற்றுவிட்டு மறுபடியும் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யும் பிரச்சினை நீங்கும். ஆன்லைன் பதிவின் மூலம் ஆவணங்கள் நேரடியாக டிஜிட்டல் ஆவணப்பதிவகத்தில் சேமிக்கப்படும், அதனை எப்போது வேண்டுமானாலும் அரசு இணைய தளத்தில் சரிபார்க்கலாம்.மேலும், இந்த நடவடிக்கை வங்கி கடன்களுக்கும் ஆதரவாக இருக்கும். ஏனெனில் பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை வங்கிகள் எளிதில் சரிபார்த்து கடன் வழங்கும். இதனால், சொத்து சந்தையில் நம்பகத்தன்மை உயரும்.
66
புதிய காலத்தை தொடங்கும் முக்கிய நிகழ்வு.!
மொத்தத்தில், இந்த ஆன்லைன் பதிவு முறை சாதாரண மக்களுக்கும், டெவலப்பர்களுக்கும், வங்கிகளுக்கும், அரசுக்கும் வெற்றி தரும் திட்டமாக அமையும். தமிழகத்தில் சொத்து பதிவு முறையில் ஒரு புதிய காலத்தை தொடங்கும் முக்கியமான படியாக இந்த நடவடிக்கை வரலாற்றில் இடம்பிடிக்கும்.