இந்திய சாலை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ள FASTag Annual Pass சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் முக்கிய நோக்கம் – அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு டோல் கட்டணங்களில் பெரும் சேமிப்பு அளிப்பது. தற்போது இந்த பாஸ் கட்டணம் வருடத்திற்கு ₹3,000. இது ஒரே நெடுஞ்சாலையில் அதிகபட்சம் 200 பயணங்களுக்கு பொருந்தும். அதாவது நீங்கள் ஒரு வருடத்துக்குள் 200 முறை அந்த பாதையில் பயணம் செய்துவிட்டால், உங்கள் பாஸ் காலாவதியாகும்.
பெங்களூரு செல்ல ஆகும் டோல் செலவு
சென்னை – பெங்களூரு பயணத்தை எடுத்துக்கொண்டால், தற்போது ஒரு வழி டோல் கட்டணம் ₹230 முதல் ₹475 வரை இருக்கும். குறைந்தபட்ச பாதையைப் பயன்படுத்தினால் ₹230, அதிவேக எக்ஸ்பிரஸ்வே வழியாக சென்றால் ₹475 வரை செலவாகும். இதன் பொருட்டு ஒரு இரு வழி பயணம் (சென்று – திரும்பி) ₹460 முதல் ₹950 வரை இருக்கும்.
வணிகர்களுக்கு இவ்ளோ மிச்சம்
ஒரு வருடத்தில் நீங்கள் 200 பயணங்கள் மேற்கொண்டால் (சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் வணிகர்கள், லாரி/கேப் டிரைவர்கள், அடிக்கடி பயணம் செய்பவர்கள்), நீங்கள் கட்ட வேண்டிய தொகை சுமார் ₹46,000 முதல் ₹95,000 வரை இருக்கும். ஆனால் FASTag Annual Pass மூலம் அதே பயணங்களுக்கு வெறும் ₹3,000 மட்டும் போதும். இதன் மூலம் குறைந்தபட்சம் ₹43,000 முதல் ₹92,000 வரை சேமிக்க முடியும்.