8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்! சம்பள உயர்வு + அரியர்ஸ்.. மெகா அப்டேட்!

Published : Jun 18, 2026, 01:20 PM IST

8th Pay Commission Update: 8வது ஊதியக் குழுவுக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். சம்பள உயர்வு, நிலுவைத் தொகை என அவர்களுக்கு இரட்டை ஜாக்பாட் அடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

PREV
14
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, அரியர்ஸ்

மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழுவுக்காகக் காத்திருக்கின்றனர். புதிய சம்பளக் கட்டமைப்பு எப்போது அமலாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், சம்பள உயர்வு மற்றும் நிலுவைத் தொகை என இரட்டை பலன்கள் கிடைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் தற்போதைய விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, ஊதியக் குழு நாடு முழுவதும் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளது. இந்த அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அரசு அதை ஆய்வு செய்து அமல்படுத்தும்.

வழக்கமாக மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதிய ஊதியக் குழுவை அமைக்கிறது. 7வது ஊதியக் குழு 2016இல் அமல்படுத்தப்பட்டதால், 8வது ஊதியக் குழு 2026 ஜனவரி முதல் கணக்கிடப்பட வேண்டும். இதன் மூலம் சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) நேரடியாகப் பயனடைவார்கள்.

24
25 மாத நிலுவைத் தொகை கிடைக்கும்

ஊழியர்களுக்கு விரைவில் இரட்டை ஜாக்பாட் செய்தி வரவுள்ளது. ஊதியக் குழுவின் அறிக்கை அமல்படுத்தப்பட்டால், சம்பள உயர்வு மற்றும் நிலுவைத் தொகை என இரண்டு வழிகளிலும் ஊழியர்களுக்குப் பலன் கிடைக்கும். இதுகுறித்த எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

அறிக்கைகளின்படி, 8வது ஊதியக் குழு 2027ஆம் ஆண்டு இறுதியில் அமைக்கப்பட்டாலும், அது ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும். இதனால், ஊழியர்களுக்கு சுமார் 25 மாத நிலுவைத் தொகை (Arrears) ஒரே தவணையில் கிடைக்க வாய்ப்புள்ளது.

34
ஃபிட்மென்ட் ஃபாக்டரை பொறுத்து சம்பள உயர்வு

சம்பள உயர்வு என்பது ஃபிட்மென்ட் ஃபாக்டரைப் பொறுத்தே அமையும். ஊழியர் சங்கங்கள் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 1.92-லிருந்து 3.83 ஆக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், அடிப்படை சம்பளம் ₹18,000-லிருந்து ₹52,000 ஆக உயரும்.

ஊழியர் சங்கங்கள் 3.68 மடங்கு கோரினாலும், அரசு அதை 2.86 அல்லது 3.00 மடங்காக நிர்ணயிக்கவே அதிக வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். அவ்வாறு அமைந்தால் குறைந்தபட்ச சம்பளம் ₹18,000-லிருந்து சுமார் ₹21,000 முதல் ₹26,000 வரை உயரக்கூடும்.

44
வீட்டு வாடகைப்படி, மருத்துவ படி

இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும்போது தற்போதைய ஊழியர்களின் சம்பளம் மட்டுமல்லாமல், ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியமும் (Minimum Pension) கணிசமாக உயரும். மேலும், அடிப்படைச் சம்பளத்துடன் சேர்த்து வீட்டு வாடகைப்படி (HRA), பயணப்படி (TA) மற்றும் மருத்துவப்படிகளும் புதிய விகிதத்தில் மாற்றி அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories