பிக்சட் டெபாசிட் வேண்டாமா? அதை விட பெஸ்டா போஸ்ட் ஆபீசில் நிறைய சாய்ஸ் இருக்கே! ட்ரை பண்ணி பாருங்க!

First Published | Jun 17, 2024, 7:21 PM IST

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை விட சிறந்த வட்டியை வழங்கும் மாற்று சிறுசேமிப்புத் திட்டங்களும் போஸ்ட் ஆபீசில் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

Fixed deposit alternatives

சாமனிய மக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய உகந்த திட்டமாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் உள்ளது. ஆனால், அதற்குப் பதிலாக சிறந்த வட்டியை வழங்கும் மாற்று சிறுசேமிப்புத் திட்டங்களும் போஸ்ட் ஆபீசில் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

National Savings Time Deposit Scheme

தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டத்தில் 1 வருட டெபாசிட்டுக்கு 6.9 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 5 ஆண்டு முதலீடு செய்பவர்களுக்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கும். ரூ. 1000 முதல் முதலீடு செய்ய முடியும். வருமான வரி விலக்கும் கிடைக்கும்.

Latest Videos


National Savings Recurring Deposit Account

ஆர்.டி. எனப்படும் தொடர் வைப்பு கணக்கு மற்றொரு முக்கிய சிறுசேமிப்புத் திட்டம். உதாரணமாக, இத்திட்டத்தில் 5 ஆண்டுகள் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்திற்கு 6.7 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கிறது.

National Savings Certificate

தேசிய சேமிப்புச் சான்றிதழ்களில் குறைந்தபட்சம் ரூ. 1000 முதல் முதலீடு செய்யலாம். நூறின் மடங்குகளாக டெபாசிட் தொகையை அதிகரிக்கவும் செய்யலாம். அதிகபட்ச வரம்பு கிடையாது. 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யவேண்டும். இத்திட்டத்திற்கு 7.7 சதவீதம் கூட்டுவட்டி கொடுக்கப்படும்.

Suganya Samudrika Scheme

சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் திட்டம் பெண் குழந்தைகளுக்கான பிரத்யேகத் திட்டம். இத்திட்டத்தில் 21 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 டெபாசிட் செய்தால் போதும். ஓர் ஆண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் 8.2% வட்டி வழங்கப்படுகிறது.

click me!