வீட்டில் இருந்தே மாதம் ரூ.9,250 வருமானம்! நேரா போஸ்ட் ஆபிஸ் போய் இந்தத் திட்டத்தில் சேருங்க!

First Published | Jun 16, 2024, 3:36 PM IST

போஸ்ட் ஆபிஸில் இரண்டு பேர் சேர்ந்து தபால் நிலையத்தில் கூட்டுக்கணக்கு தொடங்கினால் மாதம் ரூ.9,250 வருவாய் ஈட்ட முடியும்.

post office scheme

சிறுகச் சிறுக சேர்த்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புகிறவர்களுக்கு போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் வரப்பிரசாதமாக உள்ளன. அதிலும் குறிப்பாக இரண்டு பேர் சேர்ந்து தபால் நிலையத்தில் கூட்டுக்கணக்கு தொடங்கினால் மாதம் ரூ.9,250 வருவாய் ஈட்ட முடியும்.

போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டம் சாமானிய மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. இத்திட்டத்தில் போடப்படும் பணத்திற்கு நல்ல வட்டி கிடைப்பது மட்டுமின்றி, பாதுகாப்பாகவும் இருக்கும்.

Tap to resize

கணவன் - மனைவி இணைந்தோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் இருவர் சேர்ந்து தபால் நிலையத்தில் கூட்டுக்கணக்கு தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் கூட்டுக்கணக்கு ஆரம்பித்து முதலீடு செய்வதால் ரூ.5.55 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

இந்த மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் கூட்டுக்கணக்கு தொடங்கும்போது அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதே திட்டத்தில் தனிநபர் கணக்கில் முதலீடு செய்ய நினைத்தால் ரூ.9 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும்.

அஞ்சல் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்திற்கு இப்போது 7.4% வட்டி கிடைக்கிறது.  இதன்படி, கூட்டுக்கணக்கைத் தொடங்கி சேமித்து வந்தால், வட்டி மூலமே ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் பெற முடியும்.

போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டக் கூட்டுக்கணக்கில் அதிகபட்ச தொகையான ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வீட்டில் இருந்தே சம்பாதிக்க முடியும்.

Latest Videos

click me!