ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க அதிக கட்டணம்! இன்டர்சார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் ஆபரேட்டர்கள்!

First Published | Jun 13, 2024, 7:45 PM IST

ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளதால், விரைவில் ஏ.டி.எம். மூலம் பண எடுக்க அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம்.

ATM Transactions

ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு (சிஏடிஎம்ஐ) பரிமாற்றக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் இந்திய நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) ஆகியவற்றிடம் வலியுறுத்தியுள்ளது.

ATM Transactions fee

ஏ.டி.எம். மூலம் மேற்கொள்ளப்படும் ஒரு பரிவர்த்தனைக்கான அதிகபட்ச கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த CATMI விரும்புகிறது. ஏ.டி.எம். கார்டு வழங்கியுள்ள வங்கி, எந்த வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுக்கப்பட்டதோ அந்த வங்கிக்கு பரிமாற்றக் கட்டணத்தை செலுத்துகிறது.

Latest Videos


ATM Transaction limit

ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு ஒவ்வொரு வங்கியும் வரம்புகளை நிர்ணயித்துள்ளன. ஒரு வாடிக்கையாளர் இந்த இலவச மாதாந்திர பரிவர்த்தனை வரம்பை மீறினால், பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். பணம் அல்லது பணம் அல்லாத ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும்.

ATM Transaction charges

இப்போது இலவச மாதாந்திர ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பை மீறினால், வாடிக்கையாளர்கள் செலுத்தும் பரிவர்த்தனை கட்டணம் அதிகபட்சம் ரூ.21 ஆக உள்ளது. இதனை ரூ.23 ஆக உயர்த்த ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

ATM cash withdrawal

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிக்கும் ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பு மாறுபடும். இருப்பினும், சில வங்கிகளுக்கான அதிகபட்ச தினசரி பரிவர்த்தனை கட்டுப்பாடு ரூ.10,000 இல் தொடங்கி பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50,000 வரை உயர்கிறது.

ATM interchange fee

வங்கிகள் இப்போது பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லியில் ஒவ்வொரு மாதமும் சேமிப்புக் கணக்கு பயனர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து இலவச பரிவர்த்தனைகளை வழங்குகின்றன. வேறு வங்கியின் ஏடிஎம்மில் மூன்று பரிவர்த்தனைகள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன.

click me!