NPS changes
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்கள் கணிசமான உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தை அடிப்படையிலான வருவாய் முறையில் மாற்றத்தை கொண்டுவரப்படும் என்றும் கூறப்படுகிறது.
NDA govt
கடைசியாக பெறப்பட்ட சம்பளத்தில் 50% வரை பென்ஷறாகப் பெற உத்தரவாதம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. என்பிஎஸ் தொடர்பான புதிய முன்மொழிவு செயல்படுத்தப்பட்டால், 2004 முதல் பதிவு செய்யப்பட்ட சுமார் 87 லட்சம் மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர்லள் பயனடைவார்கள்.
New Pension Scheme
என்.டி.ஏ. கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு வெளியாக இருக்கும் முக்கியமான அறிவிப்புகளில் ஒன்றாக பென்ஷன் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கருதப்படுகிறது. இப்போது என்.பி.எஸ். (NPS) எனப்படும் தேசிய ஓய்வூதிய முறையில் சந்தை அடிப்படையிலான வருவாய் முறை உள்ளது. இதில் முன்மொழிந்துள்ள மாற்றம் மூலம் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50 சதவீதம் வரை பென்ஷனாகப் பெறமுடியும் எனக் கூறப்படுகின்றது.
50% assured pension
மார்ச் 2023இல், மத்திய அசு நிதிச் செயலர் டி.வி. சோமநாதன் தலைமையில் ஒரு குழுவை அமைத்ததுது. எதிர்காலத்தில் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ள பழைய ஓய்வூதிய முறைக்கு திரும்பிச் செல்லாமல் புதிய ஓய்வூதிய முறையிலேயே ஓய்வூதிய பலன்களை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்த குழு ஆராயும் என சொல்லப்பட்டது. பல மாநிலங்கள் புதிய முறைக்கு மாறுவதைக் கைவிட்டு பழைய முறைக்கு திரும்பியதால் இந்த குழு அமைக்கப்பட்டது.
central govt staff pension
இந்தக் குழு அறிக்கை அளிக்க காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை. நிதியமைச்சகத்தின் செலவினத்துறையின் சிறப்புச் செயலர் ராதா சௌகான், அன்னி மேத்யூ மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் தீபக் மொஹந்தி ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர். இவர்கள் மே மே மாதம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். இது 2023 இல் வெளியான ஆந்திராவின் புதிய ஓய்வூதியத் திட்ட மாதிரியுடன் பெருமளவு ஒத்துப்போகிறது.
Pension Option
முன்மொழியப்பட்ட திட்டம், ஊழியர் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 40-50 சதவீத ஓய்வூதியம் பெற உத்தரவாதம் அளிக்கும். பணிக்காலத்தின் அடிப்படையிலும் ஓய்வூதியத் தொகையில் இருந்து பணம் எடுக்கப்பட்டால், அதன் அடிப்படையிலும் இறுதித்தொகை தீர்மானிக்கப்படும். உத்தரவாத ஓய்வூதியத் தொகையை பூர்த்தி செய்யும் நிதியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஈடுசெய்யப்படும்.
NPS rule change
இதன் வாயிலாக 2004 முதல் புதிய ஓய்வூதிய முறையில் பதிவுசெய்த சுமார் 87 லட்சம் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பயன்டைவார்கள். உத்தரவாத ஓய்வூதியத் தொகை நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், கடைசி சம்பளத்தில் 50 சதவீதத்திற்குச் சமமான தொகையாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.