சிறந்த வட்டி விகிதத்துடன் வரி விலக்கும் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்புத் திட்டங்கள்!

First Published | May 27, 2024, 9:03 AM IST

தபால் நிலைய சிறுசேமிப்புத் திட்டங்கள் நிலையான வருமானத்துக்கான உத்தரவாதத்துடன் சிறந்த வட்டியை வழங்குகிறது. வருமான வரி விலக்கு பெறும் வாய்ப்பும் உள்ளது..

Post Office Small Saving Schemes Interest Rates and Tax benefits

வங்கிகள் வழங்கும் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களைவிட அதிக லாபத்தை வழங்குபவை தபால் நிலைய சிறுசேமிப்புத் திட்டங்கள். இந்தத் திட்டங்கள் சிறந்த வட்டியை வழங்குவதோடு, வரி விலக்கு பெறவும் உதவுகின்றன.

Post Office Senior Citizen Savings Scheme

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் மூத்த குடிமக்கறுக்கான திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் 8.2 சதவீதம் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஆயிரத்தின் மடங்குகளில் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டத்திற்கு வருமானவரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கும் கிடைக்கும்.

Tap to resize

Kisan Vikas Patra Scheme

கிஷான் விகாஸ் பத்திரத் திட்டம் நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஆனால், வரி விலக்கு பெற வாய்ப்பு இல்லை. கிசான் விகாஸ் பத்ரா மூலம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 7.5 சதவீத கூட்டு வட்டி தரப்படுகிறது. இந்தத் திட்டத்தில், டெபாசிட் செய்யும் தொகை 115 மாதங்களில் இரட்டிப்பாகும். அதாவது 9 ஆண்டுகள் 7 மாதங்களில் இருமடங்காகப் பெருகும். இத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை என்பது முக்கியமான சிறப்பு அம்சம்.

Post office monthly income scheme

தபால் நிலையத்தில் உள்ள மாதாந்திர சேமிப்பு திட்டம் நிலையான வருமானத்தைப் பெறுவதற்கான வழியாகும். குறைந்தபட்சம் ரூ.1,500 முதலீடு செய்ய வேண்டும். தனிநபர் கணக்குகளில் ரூ.9 லட்சமும், இருவர் கூட்டாக உருவாக்கிய கணக்குகளுக்கு ரூ.15 லட்சமும் அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 7.4 சதவீதம் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது.

National Savings Certificate

போஸ்ட் ஆபீசில் கிடைக்கும் தேசிய சேமிப்பு சான்றிதழ் மூலம் முதலீடு செய்தால் 7.7 சதவீதம் வருடாந்திர கூட்டு வட்டி கொடுக்கப்படுகிறது. குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000. அதிகபட்ச முதலீட்டு வரம்பு ஏதும் இல்லை. இத்திட்டத்தின் கீழ் ஒரே நபர் பல கணக்குகளைத் தொடங்கலாம். தேசிய சேமிப்புச் சான்றிதழ் முதலீட்டுக்கு வரி விலக்கும் பெறலாம்.

Mahila Samman Savings Scheme

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேகமான திட்டம். இத்திட்டத்தில் 7.5 சதவிகிதம் வருடாந்திர வட்டி தரப்படுகிறது. ஆனால், இத்திட்டத்தில் வருமான வரி சலுகை கிடையாது.

Latest Videos

click me!