பிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டியை உயர்த்திய வங்கிகள்! புதிய சேமிப்பைத் தொடங்க பெஸ்டு சாய்ஸ்!

Published : May 26, 2024, 04:21 PM IST

பல வங்கிகள் மே மாதத்தில் தங்களுடைய பிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்தியுள்ளன. இந்த வங்கிகளில் எஸ்.பி.ஐ., டி.சி.பி. வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, உத்கர்ஷ் சிறு நிதி வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஆர்பிஎல் வங்கி ஆகியவை அடங்கும்.

PREV
17
பிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டியை உயர்த்திய வங்கிகள்! புதிய சேமிப்பைத் தொடங்க பெஸ்டு சாய்ஸ்!
DCB Bank

டி.சி.பி. வங்கி அதன் நிலையான வைப்பு நிதி கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. இது ரூ. 2 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு மட்டும் பொருந்தும். புதிய வட்டி விகிதங்கள் மே 22, 2024 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு 8%, மூத்த குடிமக்களுக்கு 8.55% அதிகபட்ச வட்டி விகிதத்தை வழங்குகிறது.

27
IDFC FIRST Bank

ஐ.டி.எஃப்.சி. ஃபர்ஸ்ட் வங்கி, ரூ2 கோடி ரூபாய்க்கும் குறைவான தொகைக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. புதிய எஃப்.டி. வட்டி விகிதங்கள் மே 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மாற்றத்தைத் தொடர்ந்து, பொதுக் குடிமக்களுக்கு தற்போது 3% முதல் 7.90% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு, 0.50% கூடுதல் வட்டி வழங்குகிறது.

37
State Bank of India (SBI)

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ரூ. 2 கோடி வரையான சில்லறை டெபாசிட்டுகள் மற்றும் ரூ. 2 கோடிக்கு மேலான மொத்த டெபாசிட்டுகளுக்கு நிலையான வைப்பு நிதி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி உயர்வு மே 15, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது.

47
Utkarsh Small Finance Bank

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ரூ. 2 கோடிக்கும் குறைவான தொகைக்கு நிலையான வைப்பு நிதி வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. திருத்தப்பட்ட விகிதங்கள் மே 1 இல் இருந்தே  நடைமுறைக்கு வந்துள்ளது. பொதுக் குடிமக்களுக்கு வங்கி 4 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு, வங்கி 4.60 சதவீதம் முதல் 9.10 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.

57
RBL Bank

ஆர்.பி.எல். வங்கி 2 கோடி ரூபாய்க்கும் குறைவான தொகைக்கான நிலையான வைப்பு நிதி வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது. திருத்தப்பட்ட பிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் மே மாதம் முதல் தேதியிலேயே அமலுக்கு வந்தது. 18 முதல் 24 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் FDகளுக்கு அதிகபட்சமாக 8% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களாக இருந்தால் 0.50% கூடுதல் வட்டி கொடுக்கப்படும். 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 0.75% கூடுதல் வட்டி தரப்படுகிறது.

67
Capital Bank Small Finance Bank

கேபிடல் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் ரூ.2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்பு நிதி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. மே 6 முதல் அமலுக்கு வந்த புதிய வட்டி விகிதங்களின்படி, பொது குடிமக்களுக்கு 3.5 சதவீதம் முதல் 7.55 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 4 சதவீதம் முதல் 8.05 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது.

77
City Union Bank (CUB)

சிட்டி யூனியன் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான தொகைக்கான பிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை மாற்றி இருக்கிறது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் மே 6ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துவிட்டது. பொதுக் குடிமக்களுக்கு 5 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை, மூத்த குடிமக்களுக்கு 5 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories