EPFO e-nomination
இபிஎஃப்ஓ (EPFO) கணக்கில் நாமினியை மாற்ற ஆன்லைனில் எளிமையான வழி உள்ளது. ஈ-நாமினேஷன் முறையில் ஒரே நிமிடத்தில் நாமினியை அப்டேட் செய்யலாம்.
Update EPFO nominee
EPFO எனப்படும் பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் ஈ-நாமினேஷனை பூர்த்தி செய்து வருங்கால வைப்பு நிதி, பென்ஷன் மற்றும் EDLI இன்சூரன்ஸ் திட்டத்திற்கான வாரிசுதாரரை நியமிக்கலாம்.
EPFO account
EPFO கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் பென்ஷன் உள்ளிட்ட பணப் பலனைப் பெற நாமினேஷன் செய்ய வேண்டும். எனவே டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஈ-நாமினேஷன் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
EPFO portal
www.unifiedportal-mem-epfindia.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று ஈ-நாமினேஷன் தாக்கல் செய்யலாம். EPFO உறுப்பினர்கள் தங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இந்தத் இணையதளத்தில் லாக்-இன் செய்யலாம்.
EPFO and Aadhaar
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை நாமினியாக நியமிக்கலாம். அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் நாமினியாக இருந்தால், ஒவ்வொருக்கும் எத்தனை சதவீதம் பங்கு அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட வேண்டும்.
EPFO
விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்த பிறகு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை உரிய இடத்தில் டைப் செய்து உறுதி செய்தால், இ-நாமினேஷன் செயல்முறை முடிந்துவிடும்.