Digital Crime: அதிகரிக்கும் டிஜிட்டல் மோசடி... ஒரே ஆண்டில் 700% அதிகரிப்பு-ஷாக் தகவலை வெளியிட்ட ரிசர்வ் பேங்க்

First Published May 31, 2024, 11:13 AM IST

 வங்கியின் ஓடிபி எண்களை மோசடியாக பெறுவது உள்ளிட்ட பல்வேறு வகையில் மோசடி புகார்களின் எண்ணிக்கைகளின் அதிகரிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில்  2023-24 நிதியாண்டில் வங்கிகளில் மொத்தம் 36,075 மோசடி புகார்கள் பதிவாகியுள்ளது. 
 

ஒரு நொடியில் உலகம்

வங்கிகளுக்கு சென்று பணத்தை எடுக்கவும், பணத்தை போடவும் அலையாய் அழைந்த காலம் மாறி, வீட்டில் இருந்தே அடுத்த ஒரே நொடியில் பணத்தை உலகில் எந்த இடத்திற்கு டிரான்ஸ்பர் செய்யலாம் என்ற வசதி ஏற்பட்டுள்ளது. நவீன யுகத்திற்கு ஏற்ப திருடர்களும் தங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் வயதானவர்கள் குறிவைத்து தொலை பேசியில் பேசி தங்களது ஏடிஎம் கார்டு லாக் ஆகி விட்டது. அதனை விடுவிக்க ஓடிபி கொடுங்கள் என ஏமாற்றி பல கோடி ரூபாய் வரை தொடர் மோசடிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

மோசடி புகார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொதுமக்களுக்கு விழிப்புணர் எப்படி ஏற்படுத்தினாலும், டிஜிட்டல் திருடர்கள் அதற்கேற்றார் போல் தங்களையும் மேம்படுத்தி வருகின்றனர். சமூகவலைதளத்தில் போலியான கணக்குகளை உருவாக்கியும் பண மோசடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2023-24 நிதி ஆண்டுக்கான அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் மோசடி புகார்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

Latest Videos


708% மோசடி புகார்கள் அதிகரிப்பு

அந்த வகையில், 2022-23 நிதியாண்டில் 9,046 மோசடி புகார்கள் பதிவான நிலையில், 2023-2024ஆம் ஆண்டில் 36,075 மோசடி புகார்கள் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது. மேலும் 023-24 நிதிய ஆண்டில் மொத்தம் ரூ.13,930 கோடி மோசடி நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

2022 ஆம் நிதியாண்டில் கார்டு மற்றும் இண்டர்நெட் பேமெண்ட் பிரிவில் 3596 புகார்களில் 155 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி நடந்தது. அதே நேரத்தில்  2024 ஆம் நிதியாண்டில் 29,082 புகார்களில் 1457 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி நடந்துள்ளதாகவும் இது சுமார் 708% அதிகமாகும் என கூறியுள்ளது. 

 டிஜிட்டல் பரிவர்த்தனையில் மோசடி

ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் பெரும்பாலும் டிஜிட்டல் மோசடிகள் பண பரிவர்த்தனைகளில் (டெபிட் கார்டு, இணையதள பண பரிவர்த்தனை) நடந்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. குறிப்பாக  கடன் வழங்கும் பிரிவிலேயே அதிக அளவில் மோசடிகள் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தனியார் வங்கியில் தான் அதிகளவு மோசடி புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பொதுத்துறை வங்கிகளில் மோசடி தொகையில் பெரும்பங்கு வகிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

click me!